Monday, April 20, 2009

மொரீசியஸ் வழியாகத்தான் இந்தியாவுக்கு 43 சதவீத அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது

இந்தியாவுக்கு வந்திருக்கும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 43 சதவீதம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. சர்வதேச அளவில், வரி கட்டவேண்டாத நாடாக மொரீசியஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால்தான் பெரும்பாலான நாட்டு நிறுவனங்கள் அந்த நாட்டு வழியாகத்தான் மற்ற நாடுகளில் முதலீடுகளை செய்கின்றன என்கிறார்கள். 2000 ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை இந்தியாவுக்குள் வந்திருக்கும் 81 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டில், 35.18 பில்லியன் டாலர் பணம் மொரீசியஸ் வழியாகத்தான் வந்திருக்கிறது. டிபார்ட்மென்ட் ஆப் இன்டஸ்டிரியஸ் பாலிஸி அண்ட் புரமோஷன் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதற்காக வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்படும் பணம் மீட்கப்படவேண்டும் என்று சமீப காலமாக, தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக பா.ஜ.க. சொல்லி வருகிறது.
நன்றி : தினமலர்


2 comments:

இருமேனிமுபாரக் said...

இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீட்டிலும் பணம் பன்னுவதற்காக அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட சேனல்தான் மொரிஷியஸ். இந்தியாவிலுள்ள பல அரசியல்வாதிகளின் வாரிசுகளும் மொரிஷியஸில் கம்பெனியை பதிவு செய்து வைத்துக்கொண்டு அதன்மூலம் கோடிகளில் சம்பாதிப்பது பலரும் அறியாத ரகசியம்.

பாரதி said...

நன்றி இருமேனிமுபாரக்