இந்த நிறுவனங்களுக்கு தொலைதொடர்பு மேலாண்மை சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றும் திறமைவாய்ந்த 200 நிபுணர்கள், இனி எச்.சி.எல்., நிறுவனத்துக்கு வருவதால், சர்வதேச அளவில் எச்.சி.எல்., தன் சாப்ட்வேர் சேவையை விரிவுபடுத்த முடியும்.பார்ச்சூன் இதழ் அங்கீகரித்த 500 நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு கன்ட்ரோல் பாயின்ட் நிறுவனம் தான் சேவை செய்து வருகிறது என்பதால், அந்த சேவையை எச்.சி.எல்., தொடருவதுடன், வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.மேலும், பி.பி.ஓ., வர்த்தகத்தையும் எச்.சி.எல்., இதன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment