கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், 75 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தொடர்புகளுடன் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை, மொபைல், மல்டி மீடியா மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள், டேட்டா சென்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஆரக்கிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது. ஏழு மாடிகளுடன் கூடிய இந்த மையம், உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கூறுகையில், 'தகவல் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த வல்லுனர்கள் நிறைந்த நகராக சென்னை மாறியுள்ளது. பள்ளிக்கரணையில் 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள புதிய மையம் மூலம்,
நிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை தொட்டுள்ளது. சாப்ட்வேர் தொழில்நுட்ப பிரிவின் வளர்ச்சியில் இந்த மையம் பெரிய பங்காற்றும்' என்றார்.
நன்றி : தினமலர்
Monday, September 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment