நன்றி : தினமலர்
Monday, September 1, 2008
கிரெடிட் கார்டு கடனுக்கு உச்சகட்ட தாளிப்பு: வீட்டுக்கடனுக்கு அரை சதவீதம் தான் கிரெடிட் கார்டுக்கு 50 சதவீதம் 'லபக்'
வீட்டுக்கடன் மீதான வட்டி வீதம் அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது; ஆனால், கிரெடிட் கார்டுக்கு ஓசைப்படாமல், வாடிக்கையாளர்களிடம் 50 சதவீதம் வரை வட்டி, வட்டிக்கு வட்டி என்று குட்டிப் போட வைத்து தாளித்து விடுகின்றன வங்கிகள்.கிரெடிட் கார்டு வாங்கினால், அதில் இருந்து பொருட்கள் வாங்கிய பணத்தை வட்டி இல்லா அவகாசத்துக்குள் முழுப்பணத்தை கட்டிவிட்டால், எந்த தலைவலியும் வாடிக்கையாளருக்கு வராது. இந்த வகையில், வட்டி இல்லா அவகாசமாக 15 நாளில் இருந்து இண்டு மாதம் வரை வங்கிகள் தருகின்றன.இந்த கால கட்டத்துக்குள் முழுப் பணத்தை கட்டாவிட்டாலோ, முதல் தவணை பாக்கித்தொகை மட்டும் கட்டினாலோ வட்டி ஏற ஆரம்பித்துவிடும்.அதிலும், பாக்கியை கட்டாவிட்டால் போச்சு. வங்கிகள் வட்டி மேல் வட்டி போட்டு தாளிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாமதமாக கட்டியதால் வட்டி, ஏற்கனவே உள்ள வட்டி, பைனான்ஸ் கட்டணம் என்று ஏகப் பட்ட புரியாத அம்சங்களை பட்டியலிட்டு தாளித்து விடுகின்றன.அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் என்று பாரபட்சமில்லாமல் ராட்சத வட்டியை போட்டு வாடிக் கையாளர் மண்டையை காய வைப் பதில் போட்டி போடுகின்றன.இப்படி வட்டிகளை போடும் போது, ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் வட்டிவீதம் போடுவது சட்டப்படி சரியல்ல என்று தேசிய நுகர்வோர் கமிஷனும் கடந்த மாதம் கூறி விட்டது. ரிசர்வ் வங்கியும் கண்டிப்புடன் வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு வட்டி அத்துமீறல்களை நிறுத்தும் படி கண்டித்தும் விட்டது.ஆனால், முறையற்ற வழிகளில் கிரெடிட் கார்டு பண பாக்கிக்கு வட்டிகளை தீட்டுவதில் வங்கிகள் சளைக்கவில்லை. அரசு வங்கிகள் கட்டுப்பாடு இல்லாமல் வட்டியை தீட்டுவதால், ஐ.சி.ஐ.சி.ஐ., உட்பட தனியார் வங்கிகளுக்கு கவலையே இல்லை. அவர்களும் தங்கள் பங்குக்கு வாடிக்கையாளர் களை பிழிவதில் சளைப்பதே இல்லை.கிரெடிட் கார்டில் தவணைக்காலத்துக்குள் முழுப்பணத்தை கட்டாத வாடிக்கையாளர்களுக்கு பைனான்ஸ் கட்டணம் போடுவதில் தனியார் வங்கிகள், 50 சதவீதத்தை எட்டி விட்டது. அதுபோல, கிரெடிட் கார்டு செலவுகள் என்ற வகையில், 500ல் இருந்து ஆயிரம் ரூபாய் வரை தாளித்தும் விடுகின்றன.'வீட்டுக்கடன் வட்டிவீதம் கூட அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது வெளியே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக 50 சதவீதம் வரை வட்டிப்பணம் பிடுங்கப்படுகிறது. இது தொடர்பாக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment