Wednesday, July 16, 2008

எங்களின் பங்கு மதிப்பு குறைந்ததற்கு பிரபல நிறுவனமே காரணம் : ரேன்பாக்ஸி குற்றச்சாட்டு


மும்பை : கடந்த ஜூன் 11ம் தேதி இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனி ரேன்பாக்ஸியின் 34.8 சதவீத பங்குகளை ஜப்பான் நிறுவனமான டெய்ச்சி சான்க்கியோ, 4.6 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தது. அவ்வாறு அது வாங்கிக்கொண்டால் ரேன்பாக்ஸி நிறுவனம் டெய்ச்சியின் இந்திய கிளை நிறுவனமாகி விடும். ஆனால் அப்போது ஒத்துக்கொண்ட டெய்ச்சி இப்போது அதிலிருந்து பின் வாங்குவதாக தெரிகிறது.காரணம் என்னவென்றால் ரேன்பாக்ஸி நிறுவனம் அமெரிக்க அரசிடம் தவரான தகவல்களை கொடுத்துள்ளதாக அதன் மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் இந்திய பங்கு சந்தையில் ரேன்பாக்ஸியின் பங்குகள் 10.45 சதவீதம் குறைந்து விட்டது. டெய்ச்சி எங்கள் நிறுவன பங்குகளை வாங்கிக்கொள்வதில் இருந்து பின்வாங்கவில்லை என்று ரேன்பாக்ஸி சொல்லி வருகிறது. இந்நிலையில் எங்கள் பங்குகள் குறைந்ததற்கு இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றுதான் காரணம் என்று ரேன்பாக்ஸி குற்றம் சாட்டியிருக்கிறது. ரேன்பாக்ஸியின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் மால்வீந்தர் மோகன் சிங் நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்தார். எங்கள் நிறுவனத்தில் குழப்பத்தையும் தேவையில்லாத வதந்தியையும் ஏற்படுத்தி எங்கள் பங்குகளின் மதிப்பை குறைக்க அந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது என்றார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை அவர் சொல்ல மறுத்துவிட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை அன்று 14.01 சதவீதம் குறைந்து ரூ.409.25 விலையில் இருந்த ரேன்பாக்ஸியின் பங்குகள், இன்று 10.56 சதவீதம் உயர்ந்து ரூ.452.45 விலையில் இருந்தது.

நன்றி :தினமலர்


இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை


மும்பை :வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் வரை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பாலும் பணவீக்கம் 13 சதவீதம் வரை உயர்ந்து விடும் என்ற அச்சத்தாலும் இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் சரிந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 100.39 புள்ளிகள் ( 0.79 சதவீதம் ) குறைந்து 12,575.80 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 44.40 புள்ளிகள் ( 1.15 சதவீதம் ) குறைந்து 3,816.70 புள்ளிகளில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ., டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி, டி.எல்.எஃப், யுனிடெக் ஆகிய பங்குகள் விலை குறைந்திருந்தது


நன்றி : தினமலர்


தங்கம் விலை என்றுமில்லாத அளவாக உயர்ந்துள்ளது


லண்டன் : சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்றுமில்லாத அளவாக உயர்ந்துள்ளது. செவ்வாய் அன்று லண்டன் சந்தையில் அது அவுன்ஸ் ஒன்றுக்கு 983.50 டாலர் வரை வந்து விட்டது. அதாவது கிராம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,352.21 ஆக இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலருக்கும் மேல் விலை வந்துள்ளது. அமெரிக்காவில் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், டாலரின் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதனால் தான் தங்கம் விலை உயர்வதாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிலை சரியாக இல்லதாதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நேற்று அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலர் வரை வந்திருந்த தங்கத்தின் விலை, இந்த மாதத்திற்குள் 1000 டாலரை எட்டி விடும் என்று யு பி எஸ் என்ற நிதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்


Tuesday, July 15, 2008

இன்றைய பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி


மும்பை : மும்பை பங்கு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கரடிகளின் ஆதிக்கம் இன்று கடுமையாக இருந்தது. இதனால் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸூம் தேசிய பங்கு சந்தையில் நிப்டியும் கடும் வீழ்ச்சியை அடைந்தது. இன்றைய வீழ்ச்சியில் பெரும் பங்கேற்றது வங்கித்துறைதான். கேப்பிடல் பொருட்கள், மெட்டல், பவர், ரியால்டி, பார்மா மற்றும் ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் கடும் வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸூம் நிப்டியும் இந்த வருடத்தில் இன்றுதான் பெருமளவு வீழ்ச்சியடைந்திருந்தன. இந்தியா உள்பட ஆசிய நாடுகள் அனைத்திலும் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தையிலும் கடும் வீழ்ச்சியே இருந்தது. மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைய துவங்கிய சென்செக்ஸ் மாலை வரை அப்படியே நீடித்தது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 654.32 புள்ளிகள் ( 4.91 சதவீதம் ) குறைந்து 12,676.19 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 178.60 புள்ளிகள் ( 4.42 சதவீதம் ) குறைந்து 3,861.10 புள்ளிகளில் முடிந்தது. உலக அளவில் இன்று பங்கு சந்தையில் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணம் அமெரிக்க நிதி துறையில் ஏற்பட்ட கடும் நெருக்கடிதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க வங்கித்துறை இப்போது கடும் வீழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரிட்டனிலும் கடந்த மாதத்தில் வீடுகளின் விலை கடுமையாக குறைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை இன்னும் 0.5 சதவீதம் உயர்த்தும் என்று தெரிகிறது.

நன்றி : தினமலர்



கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக ஆசிய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி


ஹாங்காங் : ஆசியா முழுவதும் இன்று செவ்வாய்கிழமை பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் பைனான்ஸ் துறையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதும், பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. யுரோவுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்துள்ளதும் பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஜப்பானின் மிகப்பெரிய மூன்று வங்கிகள் அமெரிக்க நிதி நிறுவனங்களான ஃபேன்னி மே மற்றும் ஃபிரடி மேக் ஆகியவைகளில் 44.3 பில்லியன் டாலர்கள் டெப்ட் செக்யூரிடியில் முதலீடு செய்திருப்பதாகவும், இப்போது அந்த நிதி நிறுவனங்கள் கடும் நிதி சிக்கலில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நலிவடைந்திருக்கும் இந்த இரு அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உதவி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் அங்கு பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பங்கு சந்தையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டோக்கியோவில் நிக்கி 255.60 புள்ளிகள் குறைந்து 12,754.56 புள்ளிகளுக்கு வந்து விட்டது.இது தவிர ஹாங்காங் பங்கு சந்தையில் 839.69 புள்ளிகள் குறைந்து 21,174.77புள்ளிகளாகவும், சீனாவில் 98.81 புள்ளிகள் குறைந்து 2,779.45 புள்ளிகளாகவும், தைவானில் 322.72 புள்ளிகள் குறைந்து 6,834.24 புள்ளிகளாகவும், கொரியாவில் 49.29 புள்ளிகள் குறைந்து 1,509.33 புள்ளிகளாகவும் இருந்தது.


நன்றி : தினமலர்


Sunday, July 13, 2008

பங்குச் சந்தையில் சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது


பங்குச் சந்தை 21,000 அளவில் இருந்து 16,000 வரை வந்தவுடன் பலரும் நினைத்தனர், சந்தை இதை விடக் குறையாது, வாங்குவதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று வாங்கவும் செய்தனர். ஆனால், சந்தை அதை விடவும் குறைந்தது; 13,000 அளவும் எட்டியது. ஆனால், அவர்களில் பலருக்கு அப்போது வாங்க துணிவில்லை. 16,000க்கு வந்த போது வாங்க இருந்த துணிவு 13,000 வந்த போது இல்லை. ஏனெனில், இனம் புரியாத ஒரு பயம் தான். சந்தை ஏன் குறைந்து கொண்டே வருகிறது. பெரிய காரணங்களாகப் பார்த்தால் அரசியல் நிலைமை, தொடர்ந்து ஏறும் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து கூடி வரும் பணவீக்கம், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் ஆகியவை தான். காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் மீதும் குறை என்றும் சொல்லலாம். பழைய காலத்தில் எல்லாம் பங்குச் சந்தையில் எல்லாரும் நீண்ட கால முதலீடாக எண்ணி முதலீடு செய்து வந்தனர். நாமும் அந்தக் கம்பெனியில் ஒரு பங்குதாரர் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வந்தது. ஆதலால், வாங்கிய கம்பெனி பங்குகளை அதிக நாட்கள் விற்காமல் வைத்திருந்தனர். நல்ல கம்பெனி பங்குகளாக இருக்கும் பட்சத்தில், அது அவர்களுக்கு மிகுந்த பலனைத் தந்தது. ஆனால், தற்சமயம் பலரும் பங்குச் சந்தையை குறுகிய கால லாப நோக்கில் பார்க்கும் எண்ணம் வந்தவுடன் தான், சந்தையின் ஏற்ற-இறக்கங்களைப் பார்த்துப் பார்த்து மனதும் ஏற-இறங்க ஆரம்பித்தது.
புதன் கிழமையன்று 600 புள்ளிகளுக்கு மேல் ஷார்ட் கவரிங், முன்னேறிய அரசியல் நிலைமை, உலகளவிலான பங்குச் சந்தைகளின் ஏற்றம் ஆகியவைகளின் காரணமாக ஏறியதும், வியாழனன்று அதற்காகவே காத்திருந்தது போலவே பலரும் விற்க ஆரம்பித்தனர். அது, சந்தையை பாடாய்படுத்தியது. அதாவது, சந்தையில் எந்தவொரு ஏற்றத்திலும் விற்பதற்கு இது தான் சந்தர்ப்பம் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், சந்தை சாண் ஏறி, முழம் வழுக்குகிறது. தொடக்கத்தில் 112 புள்ளிகள் வரை கீழே இறங்கியிருந்த பங்குச் சந்தை, முடிவாக 38 புள்ளிகள் இறக்கத்துடன் முடி வடைந்தது. வெள்ளியன்று சந்தையை வழுக்கியதற்கு கச்சா எண்ணெயும் ஒரு காரணம். கச்சா எண்ணெய் பேரலுக்கு 142 டாலர் வரை மறுபடி சென்று விட்டது. இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகள் வெள்ளியன்று வெளிவந்தது. இந்த காலாண்டு முடிவுகள் சென்ற ஆண்டு இதே காலாண்டின் லாபத்தை விட 4.2 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும், அடுத்த ஆண்டு முடிவு மாதமான மார்ச், லாபத் திற்கான கைடன்ஸ் 26.6 சதவீதமாக உயர்த் தப்பட்டது (இது முன்பு 24.4 சதவீதமாக இருந்தது). இருந்தும், சந்தையில் கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. மேலும் பணவீக்கம் இந்த வாரம் 11.89 சதவீதமாக கூடியிருந்தது. இவை எல்லாமாக சேர்ந்து சந்தையை வீறு கொண்டு கீழே இழுத்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 469 புள்ளிகள் குறைந்து 13,469 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 113 புள்ளிகள் குறைந்து 4,049 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கிகளிடம் உபரி பணம்: கையில் 20,000 கோடி ரூபாய்களுக்கு மேல் உபரி பணமாக வைத்திருக்கும் ஐ.சி.ஐ.சி..ஐ., வங்கி, வெளிநாடுகளில் வேறு பிசினசில் முதலீடு செய்யலாமா என்று யோசித்து வருகிறது. வங்கி கடன்களுக்கு வட்டி விகிதங்கள் கூடுதலாகிப் போனதால், கடன்கள் வாங்குபவர்கள், வாங்குவதற்கு முன் இவ்வளவு வட்டி கொடுத்து வாங்க வேண்டுமா என்று யோசிக்கினன்றனர். அதனால் தான், பல வங்கிகளிடம் உபரி பணம் இருக்கும் நிலைமை.
தற்போதைய சூழ்நிலையில் தங்கம் தங்கமான முதலீடா?: உலகளவில் பங்குச் சந்தைகள் கீழே சென்று கொண்டிருக்கும் போது, முதலீட்டாளர்கள் மற்ற வகை முதலீடுகளைத் தேடி ஓடுவது இயல்பு தான். அந்த வகையில் தங்கத்தை தேடி பலரும் செல்வர். ஏனெனில், நிலையான முதலீடு என்பதால். சமீப காலமாக தங்கத்திற்கு இரண்டு பக்கமும் அடி. அதாவது, தங்கத்தின் உலகளவிலான விலையும் (டாலர் கணக்கில்) கூடி வருகிறது. இந்தியாவில் டாலர் மதிப்பும், ரூபாய்க்கு எதிராக கூடி வருகிறது. ஆதலால், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,000 டாலரைத் தொடாமலேயே, உள்நாட்டு ரூபாய் மதிப்பில் 13,000ஐ தொட்டு விட்டது. ஆதலால், சந்தையில் தங்கத்திற்கும் முதலீட்டாளர்கள் அதிகம் தாவவில்லை. பின்னர் பணம் எங்கு செல்கின்றன. வங்கி வட்டி விகிதங்கள் கூடி வருவதால், அங்கு பெரிய அளவில் செல்கின்றன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: நிலைமைகள் இன்னும் சரியாகவில்லை. படிப்படியாகத்தான் சரியாகும். இன்னும் நீண்ட நாட்கள் எடுக்கும். மற்ற காரணங்களுடன் வரப்போகும் காலாண்டு முடிவுகளும் சந்தையின் போக்கை மாற்றியமைக்கும். பொறுத்திருங்கள். ஆதலால், பொறுமை காப்பவர்களுக்கு பங்குச் சந்தை ஒரு லாபமான வருமானத்தைத் தரும்.
-சேதுராமன் சாத்தப்பன்

நன்றி : தினமலர்


Friday, July 11, 2008

இந்திய தொழில் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக குறைந்தது


புதுடில்லி : இந்தியாவின் தொழில் வளர்ச்சியை குறிக்கும் இன்டக்ஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் புராடக்ட்ஸ் ( ஐ ஐ பி ), மே 2008ல் 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இது 2007 மே மாதத்தில் 10.6 சதவீதமாக இருந்தது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தல்தான் இது 7 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறைந்திருந்தது. மேனுஃபேக்சரிங் புரடக்ஸன் குரோத்தும் மே மாதத்தில் 3.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது 2007 மே மாதத்தில் 11.3 சதவீதமாக இருந்தது. 2007 மே மாதத்தில் 9 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி வளர்ச்சி 2008 மே மாதத்தில் 2 சதவீதமாக குறைந்து விட்டது. சுரங்க உற்பத்தி வளர்ச்சி மட்டும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் உயர்ந்திருக்கிறது. மே 2007 ல் 3.8 சதவீதமாக இருந்த சுரங்க உற்பத்தி இந்த வருடம் மே மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்