மும்பை : கடந்த ஜூன் 11ம் தேதி இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனி ரேன்பாக்ஸியின் 34.8 சதவீத பங்குகளை ஜப்பான் நிறுவனமான டெய்ச்சி சான்க்கியோ, 4.6 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக அறிவித்திருந்தது. அவ்வாறு அது வாங்கிக்கொண்டால் ரேன்பாக்ஸி நிறுவனம் டெய்ச்சியின் இந்திய கிளை நிறுவனமாகி விடும். ஆனால் அப்போது ஒத்துக்கொண்ட டெய்ச்சி இப்போது அதிலிருந்து பின் வாங்குவதாக தெரிகிறது.காரணம் என்னவென்றால் ரேன்பாக்ஸி நிறுவனம் அமெரிக்க அரசிடம் தவரான தகவல்களை கொடுத்துள்ளதாக அதன் மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் இந்திய பங்கு சந்தையில் ரேன்பாக்ஸியின் பங்குகள் 10.45 சதவீதம் குறைந்து விட்டது. டெய்ச்சி எங்கள் நிறுவன பங்குகளை வாங்கிக்கொள்வதில் இருந்து பின்வாங்கவில்லை என்று ரேன்பாக்ஸி சொல்லி வருகிறது. இந்நிலையில் எங்கள் பங்குகள் குறைந்ததற்கு இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்றுதான் காரணம் என்று ரேன்பாக்ஸி குற்றம் சாட்டியிருக்கிறது. ரேன்பாக்ஸியின் சேர்மன் மற்றும் மேலாண் இயக்குனர் மால்வீந்தர் மோகன் சிங் நிகழ்ச்சி ஒன்றில் இதனை தெரிவித்தார். எங்கள் நிறுவனத்தில் குழப்பத்தையும் தேவையில்லாத வதந்தியையும் ஏற்படுத்தி எங்கள் பங்குகளின் மதிப்பை குறைக்க அந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது என்றார் அவர். ஆனால் அந்த நிறுவனத்தின் பெயரை அவர் சொல்ல மறுத்துவிட்டார். நேற்று செவ்வாய்க்கிழமை அன்று 14.01 சதவீதம் குறைந்து ரூ.409.25 விலையில் இருந்த ரேன்பாக்ஸியின் பங்குகள், இன்று 10.56 சதவீதம் உயர்ந்து ரூ.452.45 விலையில் இருந்தது.
நன்றி :தினமலர்
No comments:
Post a Comment