லண்டன் : சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்றுமில்லாத அளவாக உயர்ந்துள்ளது. செவ்வாய் அன்று லண்டன் சந்தையில் அது அவுன்ஸ் ஒன்றுக்கு 983.50 டாலர் வரை வந்து விட்டது. அதாவது கிராம் ஒன்றுக்கு சுமார் ரூ.1,352.21 ஆக இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் இப்போதுதான் அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலருக்கும் மேல் விலை வந்துள்ளது. அமெரிக்காவில் நிதித்துறையில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், டாலரின் மதிப்பு வீழ்ச்சி, பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இதனால் தான் தங்கம் விலை உயர்வதாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் நிதி நிலை சரியாக இல்லதாதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நேற்று அவுன்ஸ் ஒன்றுக்கு 980 டாலர் வரை வந்திருந்த தங்கத்தின் விலை, இந்த மாதத்திற்குள் 1000 டாலரை எட்டி விடும் என்று யு பி எஸ் என்ற நிதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment