நன்றி : தினமலர்
Friday, December 4, 2009
மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
மாணவர்களுக்கான சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அறிமுகப் படுத்தி உள்ளது. இதன்படி, மாதாந்திர கட்டணமாக ரூ. 11 செலுத்தி, நாளொன்றுக்கு 500 எஸ்.எம்.எஸ்.,கள் வரை அனுப்பலாம். இதுகுறித்து நிறுவனத்தின் தென் பிராந்தியத் தலைவர் அஜய் அவஸ்தி கூறும்போது, புத்தாண்டை ஒட்டி பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளோம்.புதிதாக ரிலையன்ஸ் இணைப்பை பெறுபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இலவச எஸ்.எம்.எஸ்., வசதி அளிக்கப் படும் என்று கூறினார். மேலும், கட்டணக் குறைப்பில் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் மிகக் குறைந்த அளவு கட்டண விகிதத்தை ரிலையன்ஸ் நிர்ணயித்துள்ளது. செல்போனில் பேச ஒரு விநாடிக்கு ஒரு காசு திட்டம் மட்டுமின்றி, ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு ஒரு காசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 4.67 கோடி பேர் செல்போன் உபயோகிக்கின்றனர். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு 15 சதவீதம் என்றும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment