நன்றி : தினமலர்
Sunday, December 6, 2009
துபாய் நெருக்கடி சாதாரண பிரச்னைதான்: மான்டெக்சிங் அலுவாலியா
துபாய் நெருக்கடி சாதாரண பிரச்னை தான் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி சமாளிக்க கூடியது தான். இது சாதாரண பிரச்னைதான். துபாயில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், இந்தியாவுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு எதுமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தி மேலும் பல பிரமிக்கத் தக்க மாற்றங்களை காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக், துபாய் நெருக்கடி சமாளிக்கும் அளவிற்கு சாதாரண விஷயம் தான். இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று தெரிவித்தார்.
Labels:
அரபு நாடு,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment