இந்நிலையில்,இன்று தொடங்கிய பங்குச்சந்தையும் ஏறுமுகத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139.37 புள்ளிகள் அதிகரித்து 17,065.59 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 34.65 புள்ளிகள் அதிகரித்து 5,067.35 புள்ளிகளோடு தொடங்கியது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்குகள் 1.24 சதவீதமும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரீஸ் 2.06 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.09 சதவீதமும், ஹிந்தால்கோ 2.03 சதவீதமும், மாருதி சுசுகி 2.47 சதவீதமும், எஸ்.பி.ஐ., 0.87 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.56 சதவீதமும் ஏற்றம் கண்டன.
ஆசிய பங்குச்சந்தையிலும் இன்று ஏற்றம் காணப்படுகிறது. ஜப்பான் பங்குச்சந்தையில் நிக்கி225, 122.28 புள்ளிகள்(1.31%) அதிகரித்து 9,467.83 புள்ளிகளோடு தொடங்கியது. ஹாங்காங் ஹாங்செங் 118.59 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 21,940.09 புள்ளிகளோடு தொடங்கியது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் 21.48 புள்ளிகள் அதிகரித்து(0.79%) 2,753.60 புள்ளிகளோடும், சீனா சாங்காய் 2.18 புள்ளிகள்(0.07%) அதிகரித்து 3,193.12 புள்ளிகளோடும், தைவான் பங்குச் சந்தை 41.01 புள்ளிகள்(0.54%) அதிகரித்து 7,623.22 புள்ளிளோடும், தென்கெரியா பங்குச் சந்தை கேஸ்பி 6.51 புள்ளிகள்(0.42%) அதிகரித்து 1,562.11 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியா எஸ் அன்ட் பி/ஏஎஸ்எக்ஸ் 5.1 (0.11%) புள்ளிகள் அதிகரித்து 4,706.40 புள்ளிகளோடும் தொடங்கின.
நன்றி : தினமலர்
1 comment:
Ram வருகைக்கு நன்றி
Post a Comment