Sunday, October 18, 2009

அதிக லாபத்துடன் குஷியாக தீபாவளி கொண்டாடிய முதலீட்டாளர்கள்

மும்பை பங்குச் சந்தையில் ஏக குஷியுடன் தங்கள் தீபாவளி பண்டிக்கை திருநாளை முதலீட்டாளர்கள் கொண்டாடினர். 30 லட்சம் கோடி அளவிற்கு லாபம் கிடைத்துள்ளது என்றால், சந்தேஷத்திற்கு பஞ்சம் இருக்குமா என்ன? மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2065 கடந்த வெள்ளி கிழமையுடன் முடிவடைந்தது. இந்த சாம்வாட் 2065ல் பங்குச்சந்தையில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபம் அடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில் மொத்த முதலீட்டாளர்களி் லாபம் 58 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று தீபாவளி அன்று
மும்பை பங்குச் சந்தை மற்றும் மும்பை முன்பேர வர்த்தக சந்தைகளில் சாம்வாட் 2066 பிறப்பை முன்னிட்டு முகுராத் வர்த்தகம் நடைபெற்றது. சாம்வாட் 2066ல் அதிக லாபம் கிடைக்கும் விதமாக லட்சுமி பூஜையும் நடைபெற்றது.
நன்றி : தினமலர்


1 comment:

Manithan said...

தலைமகனை இழந்த தாயின் கதறல்.

கருவில் கண்ட கனவு
களைந்து போனதையா...
உன் உருவில் கண்ட நினைவு
கலங்கிப் போனதையா....!

பத்து மாதம் உன்னைப்...
பெற்றெடுக்கப் பட்ட துன்பம்
உன்னைக் கண்டவுடன்...
என்னை விட்டுப் போனதையா....!

தலைமகனாய்த் தரணியிலே
தடம் பதித்திட்ட நாயகனே...
தாங்கவில்லையடா - இந்த
பூமி உந்தன் வருகைதனை....!

எட்டி நடை போடும் அன்னமாய்...
எம்மைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்த கண்ணழகா...!
யார் கண் பட்டதோ
உன் விழி மூட....!

பிறர் பிள்ளை தலை தடவி
பெருமைப் பட்டேனையா...
என் பிள்ளை தானாய் வளருமென
கனவு கண்டேனையா....!

பாலுட்டும் போது பாசத்தை
மட்டும் தான் ஊட்டினேனையா...
நீ... போகப் போவது தெரிந்திருந்தால்
வீரத்தையும் சேர்த்து ஊட்டியிருப்பேனையா....!

உன் வரவு காணாமல் வாசலிலே
உன் உறவுகள் துடிக்குதையா...
ஒரு இரவு வந்தாலே
உன் வீடு சுடுகாடாய் மாறுதையா....!

காலை என்னைக் கட்டியணைத்து
பிறந்த நாள் முத்தம் தந்தாயையா...
மாலை என்னைக் கதறவைத்து
உன்னுயிரையே பரிசாய் தந்தாயையா....!

பாத்துப் பார்த்து உனைப்
பத்திரமாய் வளர்த்தேனையா...
பார்த்த விழி பூத்திருக்கப்
பாவிகள் உனக்கு
பாடை கட்டி விட்டார்களையா....!

அனுக்குட்டி என்று
ஆயிரம் தடவை அழைப்பேனையா...
இந்த அம்மாவை விட்டு விட்டு
எங்கே குட்டி போனாயையா.....!

உன்னுடன் பிறப்புக்கள் அழும்குரல்
உனக்குக் கேட்கவில்லையாயையா...
உன் தம்பிமார் படும் வேதனையை
என்னால் பார்க்க முடியவில்லையையா....!

உன் தந்தை உன்னில்
உயிராய் இருந்தாரையா...
உன்னுயிர் போனபின்
உள்ளம் உடைந்து போனாரையா....!

உன்னுயிருக்குப் பதிலாய்
என்னுயிர் போயிருக்கலாமேயையா...
நீ இல்லா இவ்வுலகில்
என்னுடலும் பிணமாய் மாறிவிட்டதையா....!

உன் ஆத்மா சாந்தியடைய
தினமும் பிராத்திப்போமையா...
உன் நினைவுகள் என்றும்
எம் உயிரில் உறைந்திருக்குமையா....!



உங்கள் அபிசேகா.