17 மாதங்கள் இல்லாத அளவு இன்றைய பங்குச்சந்தையில் நிப்டி உயர்வினை கண்டது. கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதிக்கு பிறகு, இன்று தான் நிப்டி 5100 புள்ளிகளை தாண்டியது. சென்செக்ஸ்சும் 17200 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்தது.
இந்திய பங்குச்சந்தை இன்று தொடங்கும் போதே ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலுக்காக பங்குச்சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. இன்று வர்த்தகம் நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 170.61 புள்ளிகள் அதிகரித்து 17197.28 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17 மாதங்கள் இல்லாத அளவு 64.30 புள்ளிகள் அதிகரித்து 5118.55 புள்ளிகளோடு தொடங்கியது. காலை 10.33 மணியளவில் நிப்டி 5100 புள்ளிகளை தாண்ட தொடங்கியது.
மெட்டல், ஆட்டோ, ரியாலிட்டி மற்றும் வங்கி சரக்குகள் அதிக ஏற்றத்தை கண்டன.
வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 204.44 புள்ளிகள் அதிகரித்து 17231.11 புள்ளிகளோடு முடிந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 63.95 புள்ளிகள் அதிகரித்து 5118.20 புள்ளிகளாடு முடிந்தது.
நன்றி : தினமலர்
Wednesday, October 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment