Monday, August 3, 2009

மைக்கேல் ஜாக்ஸனுக்கு மயக்க மருந்தை கொடுத்தது டாக்டர் அல்ல; உதவியாளர்தான் : புது தகவல்

மைக்கேல் ஜாக்ஸனின் உயிர் போவதற்கு காரணமானது என்று சொல்லப்பட்ட வலி நிவாரண மருந்தான டெமராலை கொடுத்தது அவரது தனி மருத்துவர் டாக்டர் கான்ராட் முர்ரே என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்த மருந்தை கொடுத்தது டாக்டர் அல்ல என்றும், அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது மைக்கேலின் உதவியாளர்தான் அந்த மருந்தை ஜாக்ஸனுக்கு கொடுத்திருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. லண்டனில் இருந்து வெளியாகும் சன் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. ஏற்னவே மைக்கேல் ஜாக்ஸனுக்கு டாக்டர் முர்ரே, புரோபோஃபோல் என்ற மயக்க மருந்தை ( ஆபரேஷன் நடக்கும்முன் கொடுக்கும் ) கொடுத்திருக்கிறார். அதை போட்டு விட்டு டாக்டர் தூங்க போய் விட்டார். மைக்கேல் ஜாக்ஸனும் தூங்கியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் நேரத்திலேயே மைக்கேல் ஜாக்ஸன் எழுந்து விட்டார். எழுந்ததும் அவர் வலி நிவாரண மருந்தை கேட்டிருக்கிறார். அப்போது டாக்டர் முர்ரே தூங்கிக்கொண்டிருந்ததால், மைக்கேலின் உதவியாளர் ஜாக்ஸனுக்கு டெமரால் என்ற மருந்தை கொடுத்திருக்கிறார். ஏற்கனவே கொடுத்த புரோபோஃபோலும் இப்போது கொடுத்த டெமரோலும் கலந்து அவருக்கு கடுமையான மாரடைப்பை உண்டாக்கி விட்டது என்கிறார்கள். ஜாக்ஸன் மரணம் குறித்து விசாரித்து வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரிடம் டாக்டர் முர்ரே இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். மைக்கேலுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர் முர்ரே தூங்கிக்கொண்டிருந்ததால் உடனடியாக முதலுதவி எதையும் செய்ய முடியாமல் போனதாகவும், டாக்டர் எழுந்து பார்த்தபோது மைக்கேல் ஜாக்ஸனின் உயிர் பிரிந்து விட்டிருந்தது என்றும், இருந்தாலும் எவ்வளவோ முயன்று பார்த்து மீண்டும் இருதயத்தை இயங்க வைக்க முயற்சித்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வழக்கமாக, மைக்கேல் ஜாக்ஸனுக்கு டெமரால் என்ற வலி நிவாரணியை தேவைப்படும் போதெல்லாம் டாக்டர் முர்ரே ஒழுங்காக கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் அன்றைய தினம் அவர் தூங்கி விட்டதால் உதவியாளரிடம் அவசரமாக மைக்கேல் ஜாக்ஸன்கேட்டிருக்கிறார். அவரும் கொடுத்திருக்கிறார். அதுவே மாரடைப்பிற்கு வழி வகுத்து விட்டது.
நன்றி : தினமலர்


No comments: