நன்றி : தினமலர்
Thursday, August 13, 2009
மூலப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் பிஸ்கெட் விலை தற்போதைக்கு உயராது : ரிப்போர்ட்
பிஸ்கெட் தயாரிப்புக்கான மூலப் பொருட்களான பால் மற்றும் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையிலும் தற்போதைக்கு பிஸ்கெட் விலை உயராது என சந்தை நிலவரம் தெரிவிக்கின்றது. இருப்பினும் எடையை குறைப்பது குறித்து பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனங்கள் பரிசீலித்து வருதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பிஸ்கெட் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பார்லே பிராடக்ட்ஸ் மார்கெட்டிங் மேனேஜர் ப்ரவீன் குல்கர்னி : தற்போதைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பிஸ்கெட்டு பார்க்கெட்டகளின் எடையை குறைப்பது மட்டும் தான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார். மேலும் விலையை உயர்த்துவது என்ற முடிவில் பரவலாக எல்லா பிஸ்கெட் நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கொள்கையுடன் தான் இருக்கிறது என்றார். பிஸ்கெட் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டா போட்டியில், விலையை குறைப்பது என்பது மார்க்கெட்டை பாதிக்கும் என்பதால் தான் இந்த தயக்கம் என்றும் விளக்கியுள்ளார். இதனால் ஒன்று பிஸ்கெட் விலை 10 சதவீதம் உயர்த்தப்படலாம் இல்லையால் பேக்கேஜில் 10 கிராம் எடை குறைக்கப்படலாம் என பேசப்படுகிறது.
Labels:
தகவல்,
விலை உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment