கோவை மாவட்டம் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 7வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 16,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் குறித்து விசைத்தறி ஊழியர்கள் சம்மேளன உறுப்பினர் ஒருவர் கூறுகையில் : விசைத்தறி உரிமையாளர்களிடம் நாங்கள் அநாவசியமாக கோரிக்கை எதுவும் வைத்து நிர்பந்திக்கவில்லை, எங்களுக்கு அளிக்கப்படும் வேலைக்கான அடிப்படையில் , ஊதியத்தை திருத்தி அமைக்குமாறு மட்டும் தான் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு முறை தொழிலாளர் இணை கமிஷனர் முன் நடந்தது, விசைத்தறி உரிமையாளர்கள் இருமுறையும் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இந்நிலையில் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோவை மாவட்ட விசைத்தறி யூனிட்டுகள் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் விசைத்தறி யூனிட்டுகள் ஸ்டிரைக் காரணமாக முடங்கி கிடப்பதால், நாள் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். கூலி உடன்படிக்கையை அத்துமீறி விசைத்தறியாளர்கள் கடந்த மாதத்தில் இருந்து எங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கூலியில்10 சதவீதம் குறைத்துள்ளனர் என்றும் இது சற்றும் நியாமே இல்லாத நடவடிக்கை என குமாரசாமி குற்றம் சாட்டினார். ஏற்கனவே விசைத்தறிகளை நவீனபடுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கும் போது இத்தகைய நடவடிக்கை மேலும் தங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார். ஊதிய விகிதம் மாற்றியமைத்தல் தவிர தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ள சுமார் 80 லட்சம் அபராதத்தையும் திரும்பப்பெறுமாறு கோரிக்கை வைத்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment