Wednesday, July 29, 2009

சரிவில் முடிந்த பங்கு சந்தை

இன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. மெட்டல், ரியாலிட்டி, பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம் மற்றும் பேங்கிங் துறை பங்குகள் விலை குறைந்திருந்ததை அடுத்து பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ( ரூ.1,47,352.24 கோடி ) வர்த்தகம் நடந்திருக்கிறது. இது 39 சதவீத வளர்ச்சி. ஆசிய பங்கு சந்தைகளான ஷாங்கை ( 5 சதவீதம் ), ஹாங்செங் ( 2.4 சதவீதம் ), ஸ்டெரெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் ( 0.5 - 0.8 சதவீதம் ) ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் 0.7 - 1.5 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற தகவல் வந்ததற்கு பின் இந்திய சந்தைகள் ஓரளவு வளர்ச்சி அடைந்தன. எனினும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 158.48 புள்ளிகள் ( 1.03 சதவீதம் ) குறைந்து 15,173.46 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 50.60 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 4,513.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: