நன்றி : தினமலர்
Wednesday, July 29, 2009
ரூ.100 கோடிக்கு விற்பனை ஆன முதல் இந்தி படம் ' மை நேம் இஸ் கான் '
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், கஜோல் நடித்து வெளிவர இருக்கும் ' மை நேம் இஸ் கான் ' என்ற திரைப்படம் இதுவரை வேறு எந்த படமும் விற்காத விலையான ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை கரண் ஜோகர் என்பவர் இயக்குகிறார். அதன் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ என்ற நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப் படுகிறது. 2007 ல் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் திரைப்படம் ரூ.75 கோடிக்கும், 2008 ல் வெளிவந்த கஜினி ரூ.90 கோடிக்கும் விற்பனை ஆகி இருந்த நிலையில், மை நேம் இஸ் கான் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். ஜோகரும், கானும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அங்குள்ள இந்திய முஸ்லிம்கள் படும் கஷ்டத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது படமாக்கப்பட்டிருக்கிறது. பல வருட இடைவேளைக்குப்பின், ஷாருக்கானும் கஜோலும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை தர்மா புரடெக்ஷன்ஸ் உரிமையாளரான ஜோகர் இயக்குகிறார். ரூபர்ட் முர்டோவுக்கு சொந்தமான ஃபாக்ஸ் அண்ட் ஸ்டார் டி.வி. நெட்வொக்கின் ஒரு அங்கமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தர்மா புரடெக்ஸனும் இணைந்து பட தயாரிப்பு மற்றும் விநியோக தொழிலில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தை இந்தியாவில் விநியோகம் செய்ததில் இருந்து தான் ஸ்டாக் ஃபாக்ஸ் ஸ்டூடியோ இங்கு பிரபலமானது. இப்போது பல இந்தி மற்றும் தமிழ் படங்களின் விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment