Saturday, March 7, 2009

ஐன்ஸ்டீனின் டாக்டர் பட்டமும் ஏலத்திற்கு வருகிறது

20 ம் நூற்றாண்டின் மிக சிறந்த விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் டாக்டர் பட்டமும் ஏலத்திற்கு வருகிறது. ' ஏ நியு டிடர்மினேஷன் ஆஃப் மோல்கூலர் டைமன்சன்ஸ் ' என்ற ஆராய்ச்சி கட்டுரையை வழங்கியதற்காக, யுனிவர்சிட்டி ஆஃப் ஜூரிச் 1906 ம் ஆண்டு ஐன்ஸ்டீனுக்கு வழங்கிய டாக்டர் பட்டம் ஏலம் விடப்படுவதாக லூசர்ன் நகர ஏல நிறுவனத்தை சேர்ந்த ஃபிஷர் கேலரி தெரிவித்தார். வரும் ஜூன் மாதம் இந்த ஏலம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 1909 ம் ஆண்டு யுனிவர்சிட்டி ஆஃப் ஜெனிவா, ஐன்ஸ்டீனுக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டமும் ஏலம் விடப்படுகிறது. ஜெர்மனியில் உல்ம் என்ற நகரில் மார்ச் 14,1879 ல் பிறந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜெர்மனியில் ஆரம்ப கல்வி கற்ற ஐன்ஸ்டீன் பின்னர் சுவிட்சர்லாந்து சென்று அங்கு டிப்ளமோ பட்டம் பெற்றார். 1906 ம் ஆண்டு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஐன்ஸ்டீனுக்கு, மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஜெனிவா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1905 ம் ஆண்டு ஐன்ஸ்டீன் எழுதிய ' ரிலேடிவிடி தியரி ஆஃப் மோஷன் ' காக 1921ம் ஆண்டு பௌதீகத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, மீண்டும் ஜெர்மனி என்று வசித்து வந்த ஐன்ஸ்டீன், பின்னர் அமெரிக்கா சென்றார். ஏப்ரல் 18,1955ல் அவரது 76 வது வயதில் அமெரிக்காவில் காலமானார். 300 க்கும் மேற்பட்ட சயன்ஸ் கட்டுரைகளையும், 150 க்கும் மேலான சயன்ஸ் அல்லாத விஷயங்கள் குறித்த கட்டுரையையும் எழுதியுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, பிரபல டைம் பத்திரிக்கை, ' மேன் ஆஃப் த செஞ்சூரி ' என்று தேர்ந்தெடுத்தது. பொதுவாக டைம் பத்திரிக்கை, ஒருவரை, ' மேன் ஆஃப் த இயர் ' என்று தான் தேர்ந்தெடுக்கும்.
நன்றி : தினமலர்


No comments: