Saturday, March 7, 2009

கெமிக்கல் இன்டஸ்டிரியை ஊக்கப்படுத்தவும் விரைவில் திட்டம் : மத்திய அரசு முடிவு

ஸ்டீல், சிமென்ட் போன்ற பொருட்களுக்கான உற்பத்தி வரியை குறைத்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்ட சில நாட்களிலேயே இன்னொரு துறைக்கான சலுகை திட்டம் குறித்தும் திட்டமிட ஆரம்பித்தது. அந்த துறை, கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை. இந்த துறைக்கும் கஸ்டம்ஸ் மற்றும் எக்ஸைஸ் டூட்டியை கட் செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாப்தாவுக்கு இப்போது விதிக்கப்படும் 5 சதவீத கஸ்டம்ஸ் டூட்டியை இல்லாமல் ஆக்குவது, மோனோ எத்தில் கிளைகோலுக்கு விதிக்கப்படும் 8 சதவீத எக்ஸைஸ் டூட்டியை 4 சதவீதமாக குறைப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலுக்குப்பின் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த டூட்டி கட் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் இந்திய கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விலை குறைந்திருப்பது, ஏற்றுமதி ஆர்டர் குறைந்திருப்பது, உள்நாட்டின் டிமாண்ட் குறைந்து போனது போன்ற காரணங்களால் இந்த துறையின் விரிவாக்க திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும், உற்பத்தி சிறிய அளவிலேயே நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள். டெக்ஸ்டைல் தொழிலுக்கு பயன்படும் விஸ்கோஸ் ஸ்டாபிள் பைபர் தயார் செய்யும் கிராஸிம் நிறுவனத்தின் விற்பனை , மூன்றாவது காலாண்டில் 22 சதவீதம் குறைந்திருப்பதை அடுத்து, அந்த நிறுவனம், உற்பத்தியை நிறுத்தி விடலாமா என்று யோசித்து வருவதாக சொல்கிறார்கள். கடந்த வருடம் ஜூலை மாதம் பேரலுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 40 - 45 டாலர் தான். எனவே கெமிக்கல், சால்வன்ட், பாலிமர், மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் விலை, கடந்த 2002 - 03 ல் இருந்த நிலைக்கு போய்விட்டது என்கிறார்கள். .
நன்றி : தினமலர்


No comments: