நன்றி : தினமலர்
Saturday, March 7, 2009
டில்லியில் இருந்து பாங்காக் கிற்கு நேரடி விமானம் : கேதே பசிபிக் இயக்குகிறது
வரும் 30ம் தேதி முதல் புதுடில்லியில் இருந்து பாங்காக்கிற்கு தினசரி நேரடி விமானசேவை நடத்த இருப்பதாக கேதே பசிபிக் ஏர்வேஸ் அறிவித்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் நல்ல போக்குவரத்து இருந்து வருகிறது. எனவே நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்றார் கேதே பசிபிக் இன் இந்தியாவுக்கான பொது மேளாளர் டாம் ரைட். டில்லியில் 3.30 க்கு புறப்படும் விமானம் பாங்காக்கிற்கு, அங்குள்ள நேரப்படி 8.55 க்கு போய் சேரும். அங்கிருந்து 17.25 க்கு புறப்படும் அந்த விமானம் டில்லிக்கு, இங்குள்ள நேரப்படி 19.45 க்கு வந்து சேரும். பயண நேரம் குறைவாக இருப்பதால் பாங்காக்கிற்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு பகல் முழுவதையும் ஊர் சுற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்றார் டாம். டில்லியில் இருந்து பாங்காக் செல்லும் அந்த விமானம், பாங்காக்கில் இருந்து ஹாங்காங்கிற்கும் செல்வதால், அங்கு செல்ல விரும்பும் பயணிகள் எளிதாக அதே விமானத்தில் ஹாங்காங்கும் செல்லலாம். மேலும் ஜப்பான், கொரியா மற்றும் சீனா செல்ல விரும்புபவர்களுக்கும் இது வசதியாக இருக்கும் என்றார் அவர். ஹாங்காங்கை சேர்ந்த கேதே பசிபிக் விமான நிறுவனம், இந்தியாவில் கடந்த 55 வருடங்களாக விமான சேவையில் ஈடுபட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment