சத்யத்தை வாங்குவதற்கு கடைசியாக ரேசில் எல் அண்ட் டி, ஸ்பைஸ் டெலிகாம், டெக் மகிந்தரா ஆகிய நிறுவனங்களிடையே போட்டி உள்ளது.
கச்சா எண்ணெய் ஒரே நாளில் 11 சதவீதம் கூடியுள்ளது. வழுக்கியே விழுந்து கொண்டிருந்த எண்ணெய் ஒரேயடியாக ஜம்ப் செய்தது பலருக்கு ஆச்சரியம். குறிப்பாக எண்ணெய் உற்பத்தி கம்பெனிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. கெய்ர்ன் இந்தியாவின் பங்குகள் இந்த செய்தி கேட்டதும் மேலே சென்றது. டாலரும் ரூபாயும்: சரிந்து கொண்டிருக்கும் ரூபாயை பார்த்தால் பயமாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டாலருக்கு 39 ரூபாய் என்று இருந்தது. அது தற்போது ஒரு டாலருக்கு 51 ரூபாய்க்கு மேல் வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 39 சதவீதம் சரிவு. ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறிய நிம்மதி. டாலர் மதிப்பில் விலைகளைக் குறைத்து, மற்ற நாடுகளுடன் போட்டிப் போட இது ஒரு வாய்ப்பு. இறக்குமதிகள் சென்ற மாதம் 18 சதவீதம் குறைந்துள்ளது என்பதும் ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஜனவரியில் 11 சதவீதம் கூடியுள்ளது(அதாவது டிசம்பர் விற்பனையை வைத்துப் பார்க்கும் போது). அதே சமயம், சென்ற ஆண்டு ஜனவரியை வைத்துப் பார்த்தால் 5 சதவீதம் கூடியுள்ளது.
அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய விவரங்கள் அடுத்த வாரம் வரத் தொடங்கும். அது நிச்சயம் சந்தைக்கு ஒரு தகவலைத் தருவதாக இருக்கும். நாடு எப்படிச் செல்கிறது... கம்பெனிகள் எப்படி செயல்படுகின்றன என்று தெரிய வரலாம். எதிர்பார்த்தது போல பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல தேய்ந்து வருவது ஒருவித பயத்தையும் ஏற்படுத்துகிறது. சென்ற வாரம் 3.03 சதவீதமாக இருந்தது 0.60 புள்ளிகள் குறைந்து 2.43 சதவீதமாக நிற்கிறது. சென்ற ஆண்டு இதே சமயத்தில் 6.21 சதவீதமாக இருந்தது. ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ரிசர்வ் வங்கியே பணவீக்கம் இவ்வளவு கீழே செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் இது தான் குறைந்த அளவாகும். குறையும் பணவீக்கத்தால் சந்தைக்கு செல்லும் போது பை நிறைகிறதோ இல்லையோ மனம் நிறைகிறது; புள்ளி விவரங்கள் தந்த ஆறுதல். தற்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்க்கும் போது அடுத்த வாரம் அட்வான்ஸ டாக்ஸ் வாரமாகத்தான் இருக்கும். அது நன்றாக இருந்தால் சந்தைகளும் அதை வரவேற்று மேலே செல்லும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment