சில மாதங்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை, மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது. முக்கிய விசேஷ காலங்கள், முகூர்த்தங்கள் வரும் தை, ஆவணி உள்ளிட்ட மாதங்களில் தங்கத்தின் விலை உச்சத்திற்குச் செல்லும். சமீப காலமாக தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டி, நடுத்தர மக்களை பரிதவிக்கச் செய்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,284 ரூபாயை எட்டியது. அப்போது ஒரு சவரன் 10,272 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள் ளது. கடந்தாண்டு நவம்பர் மாத துவக்கத்தில் ஒரு கிராம் 1,097 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,774 ரூபாய்க்கும், 15ம் தேதி ஒரு கிராம் 1,115 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. டிசம்பர் முதல் தேதியில் ஒரு கிராம் 1,201 ரூபாய்க்கும், சவரன் 9,608 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. உயர்ந்துவந்த நிலையில், டிசம்பர் 10ம் தேதி தங்கத்தின் விலையில் சிறிய சறுக்கல் காணப்பட்டது. ஒரு கிராம் 46 ரூபாய் குறைந்து 1,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் 1,242 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,936 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 1,247 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,976 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. தை மாதம் பிறக்க இருக்கும் நிலையில் கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியதால், திருமணத் திற்காக நகைகள் வாங்க காத்திருக்கும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment