நன்றி : தினமலர்
Thursday, January 1, 2009
எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரிப்பு
எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரித்துள்ளதால், வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்துள்ளது. விழாக்கள், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம். கடந்தாண்டு வரை, இதற்காக பலதரப்பட்ட டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் கடைகளில் விற்கப்பட்டன. தற் போது, மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது எளிதாக உள்ளதால், வாழ்த்து அட்டைகளை பலரும் மறந்து விட்டனர். 'புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் சீசனில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, வழக்கத்தை விட இந்தாண்டு 20 முதல் 30 சதவீதம் குறைந் துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகளால் மக்கள் மிக நுணுக்கமான வழியில் வாழ்த்து கூறுகின்றனர்' என்று, டில்லியில் உள்ள வாழ்த்து அட்டை விற்பனையாளர் லத்தீஷ் கூறுகிறார். 'பிறந்த நாள் மற்றும் பிரன்ட்ஷிப் கார்டுகளை தவிர, பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கான வாழ்த்து அட்டைகள் வாங்க, குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர்' என்று, புகழ்பெற்ற 'கன்னாட்' நிறுவனத்தின் கேஷியர் கூறுகிறார். 'இந்தாண்டு நடந்த வேதனையான சம்பவங் களால் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்ள விருப்பமில்லை' என்று, மாணவி ஒருவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியால், 35 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, 'ஹெல்பேஜ் இந்தியா'வின் வாழ்த்து அட்டை பிரிவு மேலாளர் நந்திதா கூறுகிறார். இ-மெயில், எஸ்.எம்.எஸ்.,- எம்.எம்.எஸ்., வளர்ச்சியால் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, சரிவை சந்தித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment