மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க முடிவு செய்துள்ளது. அதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. தொலைபேசி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் 'டிராய்' அமைப்பு, மொபைல் நிறுவனங்களின், மொபைல் இணைப்பு சேவை தொடர்பாக, சில கட்டணங்களை விதித்துள்ளது. இந்த கட்டணங்களை இப்போது குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி உள்ளது. பி.எஸ்.என்.எல்., மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறது என்றால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது. இந்த கட்டணம் 13 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும். இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
'டிராய்' தன் முடிவை இப்போது பரிந்துரை அறிக்கையாக அரசுக்கு அனுப்பினாலும், இறுதி முடிவு, மார்ச் மாதம் எடுக்க உள்ளது.
அப்போது தான் இது தொடர்பாக முழு விவரம் தெரியும். இந்தியாவில் மொபைல் போன் சேவை, சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப முறைகளில் தரப்படுகிறது. ஜி.எஸ்.எம்., முறையில் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ள சந்தாதாரர்கள் தான் அதிகம். சி.டி.எம்.ஏ.,வில் கணிசமாக குறைவாகத்தான் உள்ளனர். இதனால், சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பத்தை பின்பற்றும் நிறுவனங்களை விட, ஜி.எஸ்.எம்.,நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. போட்டி காரணமாக, சந்தாவை குறைத்து, அதனால், ஓரளவு இழப்பை தான் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், 'டிராய்' திட்டம் பற்றி மொபைல் நிறுவனங்கள் தரப்பில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன. 'டெர்மினேஷன் கட்டணத்தை ஒன்பது பைசாவாக குறைக்க வேண்டும். அப்போது தான் எல்லா நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்படாமல் வர்த்தக போட்டியை சமாளிக்க முடியும்' என்று சில நிறுவனங்கள் தரப்பில் கருத்து கூறப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் இறுதி முடிவு தெரிந்த பின், மொபைல் கட்டணம் அதிக பட்சம் 30 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதுபோல, சாதா போன் சந்தாதாரர்களுக்கும் இதனால் பலன் கிடைக்கும்.
நன்றி : தினமலர்
Saturday, January 3, 2009
ரிசர்வ் வங்கியின் இரண்டாவது கட்ட சலுகை
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான, இரண்டாவது சலுகை திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வீதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றம், இம் மாதம் 17ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேரியல் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது விரிவுப்படுத்தப்படும். வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.0 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ரொக்க கையிருப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், வங்கிகளில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம், வங்கிகளுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கும். இந்திய கட்டுமான நிதிக் கழகம் தங்கள் நிதி ஆதாரத்தை மேலும் அதிகரித்து கொள்ள, வரிச்சலுகை அளிக்கும் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள் ளது. ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் நிதி திரட்டவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்
Labels:
தகவல்,
ரிசர்வ் வங்கி
கண்ணாமூச்சி காட்டும் தங்கம் விலை : மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது
சில மாதங்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை, மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது. முக்கிய விசேஷ காலங்கள், முகூர்த்தங்கள் வரும் தை, ஆவணி உள்ளிட்ட மாதங்களில் தங்கத்தின் விலை உச்சத்திற்குச் செல்லும். சமீப காலமாக தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாயை எட்டி, நடுத்தர மக்களை பரிதவிக்கச் செய்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 1,284 ரூபாயை எட்டியது. அப்போது ஒரு சவரன் 10,272 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள் ளது. கடந்தாண்டு நவம்பர் மாத துவக்கத்தில் ஒரு கிராம் 1,097 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,774 ரூபாய்க்கும், 15ம் தேதி ஒரு கிராம் 1,115 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,920 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. டிசம்பர் முதல் தேதியில் ஒரு கிராம் 1,201 ரூபாய்க்கும், சவரன் 9,608 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. உயர்ந்துவந்த நிலையில், டிசம்பர் 10ம் தேதி தங்கத்தின் விலையில் சிறிய சறுக்கல் காணப்பட்டது. ஒரு கிராம் 46 ரூபாய் குறைந்து 1,155 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் 1,242 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,936 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 1,247 ரூபாய்க்கும், ஒரு சவரன் 9,976 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று மாலை, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. தை மாதம் பிறக்க இருக்கும் நிலையில் கண்ணாமூச்சி காட்டி வந்த தங்கத்தின் விலை மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை எட்டியதால், திருமணத் திற்காக நகைகள் வாங்க காத்திருக்கும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: தினமலர்
Thursday, January 1, 2009
எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரிப்பு
எஸ்.எம்.எஸ்., மவுசு அதிகரித்துள்ளதால், வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்துள்ளது. விழாக்கள், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம். கடந்தாண்டு வரை, இதற்காக பலதரப்பட்ட டிசைன்களில் வாழ்த்து அட்டைகள் கடைகளில் விற்கப்பட்டன. தற் போது, மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்புவது எளிதாக உள்ளதால், வாழ்த்து அட்டைகளை பலரும் மறந்து விட்டனர். 'புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் சீசனில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, வழக்கத்தை விட இந்தாண்டு 20 முதல் 30 சதவீதம் குறைந் துள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகளால் மக்கள் மிக நுணுக்கமான வழியில் வாழ்த்து கூறுகின்றனர்' என்று, டில்லியில் உள்ள வாழ்த்து அட்டை விற்பனையாளர் லத்தீஷ் கூறுகிறார். 'பிறந்த நாள் மற்றும் பிரன்ட்ஷிப் கார்டுகளை தவிர, பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கான வாழ்த்து அட்டைகள் வாங்க, குறைவான வாடிக்கையாளர்களே வருகின்றனர்' என்று, புகழ்பெற்ற 'கன்னாட்' நிறுவனத்தின் கேஷியர் கூறுகிறார். 'இந்தாண்டு நடந்த வேதனையான சம்பவங் களால் வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்ள விருப்பமில்லை' என்று, மாணவி ஒருவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியால், 35 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, 'ஹெல்பேஜ் இந்தியா'வின் வாழ்த்து அட்டை பிரிவு மேலாளர் நந்திதா கூறுகிறார். இ-மெயில், எஸ்.எம்.எஸ்.,- எம்.எம்.எஸ்., வளர்ச்சியால் வாழ்த்து அட்டைகளின் விற்பனை, சரிவை சந்தித்துள்ளது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்
2008ம் ஆண்டு பங்குச்சந்தை நிலவரம்: வரலாறு காணாத அளவு முதலீடுகளை புரட்டிப் போட்டது
கடந்த 2008ம் ஆண்டு பங்குச் சந்தை - வரலாறு காணாத உயர்வு - அதே சமயம் வரலாறு காணாத தாழ்வு. கச்சா எண்ணெய் - வரலாறு காணாத உயர்வு - அதே சமயம் வரலாறு காணாத தாழ்வு. உலகமெங்கும் தொடர் குண்டு வெடிப்புகள், ஏ.ஐ.ஐ., - சிட்டி வங்கி, லேமென் பிரதர்ஸ், பியர்ஸ் ஸ்டேர்ன்ஸ், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸ்லர் என்று பல பிரபல நிறுவனங்கள் சரிந்து, முதலீட்டாளர்களின் முதலீடுகளை பாதியாக்கிச் சென்றது. இந்திய சந்தையின் நிலை மட்டுமல்ல, ஜப்பானின் பங்குச் சந்தையும் கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. இது போல உலகின் அனைத்து பங்குச் சந்தைகளும் பெரும் அளவு கீழே இறங்கியுள்ளன. கடந்த 2008ல் பங்குச் சந்தை 53 சதவீதம் நஷ்டத்தை கொடுத்துள்ளது. உலகளவில் அதிகம் விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் 50 சதவீத நஷ்டத்தை கொடுத்துள்ளது. தங்கம் லாபம், நஷ்டமில்லாமல் முடிந்துள்ளது. இது தவிர வங்கி டிபாசிட்டுகள் நிலையான வருமானத்தை கொடுத்துள்ளன.
இன்று பிறக்கும் 2009ம் ஆண்டு எப்படி இருக்கும்?
கச்சா எண்ணெய்: உலகில் அதிக கச்சா எண்ணெய் உபயோகிக்கும் நாடுகளில் முதன் மையானது அமெரிக்கா. 27 சதவீத உலக எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா உபயோகிக்கிறது. அங்கு தற்போது உபயோகம் குறைந்து வருகிறது. வருங்காலத்திலும் குறையும் என எதிர்பார்க் கப்படுகிறது. மேலும், உலகளவிலும் கச்சா எண்ணெய் உபயோகம் குறைந்து வருகிறது. இதனால், விலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. யாரும் எதிர்பார்க்காத அளவு உயரத் திற்கும் சென்றது, சென்ற வேகத் தில் கீழேயும் வந்தது. இருந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சரியான அளவு குறைக்கப்படவில்லை. எண்ணெய் தயாரிக்கும் நாடுகள் ஒன்று கூடி உற்பத்தியை குறைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளன. கச்சா எண்ணெய் பேரலுக்கு தற் போது 37 டாலர் வரை இருக்கிறது. அடுத்த ஆண்டு உபயோகம் கூடும் என எதிர்பார்ப்பதால் பேரல் 45 முதல் 50 டாலர் வரை செல்லலாம்.
மியூச்சுவல் பண்டுகள்: மியூச்சுவல் பண்டுகளில் பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக் கின்றனரோ என்னவோ? தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் கவலையடையத் தேவையில்லை. மியூச்சுவல் பண் டுகள் கைவசம் வைத்திருப்பவர்கள் ஆவரேஜ் செய்ய நல்ல நேரம் இது.
பொறுமையாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நல்ல வருமானம் தரும் இடம் மியூச்சுவல் பண்டு. மியூச்சுவல் பண்டுகளின் மதிப்பு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடும். பணவீக்கம் குறைந்து வருகிறது. இது சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 ஆண்டுகளின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதம் குறைவு. கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசு இன்னும் பெட் ரோல், டீசல் விலையை சரியான அளவு குறைக்கவில்லை. அப்படிக் குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்து கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும். அன்னிய முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாலும், கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ளதாலும், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் பெறும் அன்னியச் செலாவணியை மாற்றாமல் வைத்திருப்பதாலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 2009ம் வருடம் 46லிருந்து 49க்குள் சுழலாம்.
தங்கம்: வீடு வாங்க ஓடிக் கொண் டிருந்தவர்கள் எல்லாம் தற்போது தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது தங்கம் விலை கூடுவதற்கு ஒரு காரணம். இரண்டாவது, இப் போது இருக்கும் சூழ்நிலையில் இது ஒரு மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று பலரும் கருதுகின்றனர். தங் கம் உலகத்தின் பொதுவான நாணயமாயிற்றே. 2009ல் தங்கம் விலை கூடலாம். வீடுகளின் விலை இன்னும் குறைய வேண்டும் என்று வீடு வாங்க இருப்பவர்கள் காத்திருக்கின்றனர். வீடு வாங்குபவர்களுக்கு 2009 நிச்சயம் ஒரு பொன்னான வாய்ப்பு தான். ஏனெனில் 1998க்கு பிறகு கூட ஆரம்பித்த வீட்டு விலை, தற்போது குறைய ஆரம்பித்துள்ளது.
பங்குகள்: பங்குச் சந்தை தற்போது 9,700 புள்ளிகள் அளவில் இருக்கிறது. அதாவது, 2005ல் எந்த அளவு இருந்ததோ அந்த அளவு இருக்கிறது. சந்தையில் 21,000 புள்ளிகள் அளவில் பங்கு வாங்கியவர்களை வைத்துப் பார்க்கும் போது தற்போது வாங்குவது 50 சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடியில் பழுதில்லாத கம்பெனிகளை வாங்கலாம். இல்லாவிடினும் இரண்டு, மூன்று ஆண்டுகள் சந்தையில் இருப்பேன் என்று நினைத்து வாங்குபவர்கள் இந்த நிலையிலும் வாங்குவது உசிதம் தான். தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் ஆடம்பர செலவுகள் செய்யமாட்டார்கள். ஆதலால், வங் கித்துறை, கட்டுமானத்துறை, மின் உற்பத்தி, வீட்டு உபயோகத்துறையைச் சேர்ந்த கம்பெனிகள் 2009ல் பரிணமிக்கக் கூடும். மெட்டல், ஆட் டோ மொபைல், தொழில் நுட்பத் துறை ஆகியவை பின் சீட்டுக்கு செல்லலாம்.எப்போதும் அதிக விலை விற்கும் காய்கறி கூட மலிவு விலையில் கிடைக்கும். அப்போது அந்தக் காய்கறியை நாம் வாங்கி ருசிபார்ப்பது இல்லையா அதுபோல சந்தையில் பல பங்குகள் மலிவாகக் கிடைக்கின் றன. மலிவாகக் கிடைக்கிறதே என்று வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இது தங்கம் போல் இல்லை. தங்கம் விலை குறைந்ததும் பலர் வரிசையில் நின்று வாங்கினர். ஆனால், பங்குச் சந்தை குறைந்தால் வாங்குபவர்கள் சிலரும் காணாமல் போய்விடுவர். ஏனெனில் கடந்த ஆண்டில் எல் லாரும் குறைந்த காலத்தில் அதிகம் பங்குச் சந்தையில் சம்பாதித்தனர். அதுவே ரீபிட் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அந்தக் காலம் திரும்பி வருமா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், பங்குச் சந்தையை நீண்ட காலம், அதாவது ஒரு தென் னம் கன்றையோ அல்லது ரப்பர் கன்றையோ நடும் போது சில ஆண்டுகளுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு பாதுகாப்போம் அல்லவா, அதுபோல பாதுகாத்தால் பங்குச் சந்தையும் நீண்டகாலத்தில் பலன் தரும். சந்தை சிறிது சிறிதாக மேலே செல்லும் என்பது உறுதி. காரணம், இந்தியாவில் பிரச்னைகள் குறைவு. மற்றபடி பெரிய சந்தை, ஆதலால் வாய்ப்புகள் அதிகம். இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும். சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர். நான்கு ஆண்டுக்கு முன் படித்து முடித்தவுடன் ஒரு நபருக்கு இரண்டு வேலை வாய்ப்புகள் காத்து கிடந் தன. ஆதலால், மேலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. தற்போது அதற்கு தலைகீழ். வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக் குறியுடன் பலர் இருக்கின்றனர். இருக்கும் வேலை நிரந்தமானதா என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். திறமைகளை வளர்த்துக் கொள் ளுங்கள், அது பந்தயத்தில் ஜெயிக்க உதவும். மேலும், பெரிய சம்பளம் எதிர்பார்க்காதீர்கள். உலக வர்த்தகம் 2009ல் 2 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தற்போதைய கோஷம், விலையை குறையுங்கள். விலை குறைந்தால் நிறைய மக்கள் வாங்க வருவர்; அது உற்பத்தியை கூட்டும்; தொழில் வளர்ச்சியைப் பெருக்கும்; அது கம்பெனிகளின் லாபத்தை கூட்டும்; கூடும் லாபம் சந்தையை கூட்டும். பொருளாதாரம் என்பதே சக்கரம் தானே. மார்ச் - ஏப்ரலில் தேர்தல் என்றால், அதற்காக தயாராக வேண்டிய நேரம் போதாது என்பதால் சீர்திருத்தங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை. அப்படி சீர்திருத்தங்கள் வரும்பட் சத்தில், சில்லரை விற்பனைத் துறையில் வெளிநாட்டு முதலீடுகள், வங்கி சீர்திருத்தங்கள், வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளில் முதலீடு செய்யும் உச்சவரம்பை கூட்டுவது, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு செய்வது, தளர்த் தப்பட்ட ஊழியர் சட்டதிட்டங்கள்-அதாவது நிறுவனங்களை மூடுவது, ஆட்களை குறைப்பது சம்பந்தமாக அறிவிப்புகளை புதிய அரசிடம் எதிர்பார்க்கலாம். மேலும், அரசு கம்பெனிகளின் புதிய வெளியீடுகளையும் எதிர்பார்க் கலாம்.
9,647 புள்ளிகளுடன் முடிவு: ஆண் டின் கடைசி வாரம். கரடு, முரடான 2008 நம்மை விட்டு செல்கிறது. கடைசி வாரம் நல்லவிதமாகவே இருந்தது ஒரு விதமாக மகிழ்ச் சியான முடிவு என்றே கொள்ளலாம். நேற்று சந்தை மேலேயே துவங்கியது. எல்லாரும் எதிர்பார்த்தது சந்தை சென்டிமென்டாக 10,000 புள்ளிகளை 31ம் தேதி தொட்டு விடும் என்று தான். ஆனால், நடந்தது என்ன? நேற்று முழுவதும் சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. காரணம், எதிர்பார்த்தபடி எந்த பேக்கேஜும் வரவில்லை. மேலும், லாப நோக் கில் விற்பவர்களும் இருந்தனர். ஆதலால், சந்தை சரியத் துவங்கியது. முதலீட்டாளர்களின் மனதும் சரியத் துவங்கியது. இறுதியாக மும்பை பங் குச் சந்தை 68 புள்ளிகள் குறைந்து 9,647 புள்ளிகளுடனும், தேசிய பங் குச் சந்தை 20 புள்ளிகள் குறைந்து 2,959 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
2009 எப்படி இருக்கும்?
* டிபாசிட் வட்டி விகிதம் குறையும்.
* கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
* பங்குச் சந்தை 9,000 முதல் 12,500 புள்ளிகளுக்குள் நிலைபெற்றிருக்கும்.
* மியூச்சுவல் பண்டுகளில் முதலீடுக்கு உத்தரவாதம் என்ற ஸ்கீம்கள் அதிகம் வரும்.
* நிரந்தர வருமான திட்டங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.
* தங்கம் அதிகம் விரும்பி வாங்கப்படும். ஆதலால், விலை கூடலாம்.
* பணவீக்கம் குறையும். 2 முதல் 3 சதவீதம் அளவில் இருக்கும்.
* வராக்கடன்கள் கூடலாம். 2009 சிறிது கரடு முரடான பாதையாகத்தான் இருக்கும். கவனித்துத் தான் பயணிக்க வேண்டும், வாழ்க்கைப் பயணம் அல்லவா?
சேதுராமன் சாத்தப்பன்

பங்கு சந்தை நிலவரம்
Subscribe to:
Posts (Atom)