Monday, November 3, 2008

புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்: அலட்சியப்படுத்தி தொடர்ந்து இறக்குமதி

புற்று நோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ்களை, பல்வேறு நாடுகள் தடை செய்திருந்தாலும், இந்தியா மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.ஆஸ்பெஸ்டாஸ் என்று அழைக்கப்படும் கல்நார்களில் உள்ள அபாயகரமான ரசாயனங்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட, உள்நாட்டில் இவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளது.ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ஆஸ்பெஸ்டாஸ்களை தொடர்ந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ரோம் நகரில் நடந்த மாநாட்டில் 126 நாடுகள் கலந்து கொண்டு, வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ், அபாயகரமான ரசாயனப் பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டு, அதை கண்காணிப்பு பட்டியலில் வைக்க முடிவு எடுத்துள்ளன.கனடாவும், ரஷ்யாவும் தான், உலகிலேயே அதிகளவில் ஆஸ்பெஸ்டாஸ்களை ஏற்றுமதி செய்கின்றன. அதிகளவில் இவற்றை இறக்குமதி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. இதனால், இந்த மூன்று நாடுகளும், இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு ஆஸ்பெஸ்டாஸ் ஏற்றுமதி செய்யப்படும் போதும், அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகள், அவற்றின் மீது அபாயகரமான ரசாயனம் என்ற முத்திரை குத்தியே அனுப்புகின்றன.மத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஆஸ்பெஸ் டாஸ் இறக்குமதிக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு தடை விதிக்கும் அதிகாரம் கொண்ட ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம், தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு ஆதரவாக உள்ளது.
நன்றி :தினமலர்


No comments: