Monday, September 15, 2008

திவாலா ஆகி விட்ட அமெரிக்காவின் நிதி வங்கி லேமன் பிரதர்ஸ்

அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதி வங்கியான லேமன் பிரதர்ஸ் இப்போது திவாலா ஆகும் நிலைக்கு வந்துள்ளது. திவாலா ஆகி விட்டதற்கான அறிவிப்பை அது அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அந்த நிதி வங்கிக்கு ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான டாலர் நஷ்டத்தை அடுத்து அது திவாலா நோட்டீஸ் கொடுக்க இருக்கிறது. லேமன் பிரதர்ஸ் திவாலா ஆகி விட்டது என்ற தகவல் வெளியானதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்திருப்பதாலும் இன்று ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. லேமன் பிரதர்ஸை பேலவே நஷ்டத்தில் இருக்கும் மெரில் லிஞ்ச் நிதி வங்கியை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறது. இதே போல் லேமன் பிரதர்ஸையும் அதன் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற பார்க்லேஸ் பேங்க்கும், பேங்க் ஆப் அமெரிக்காவும் முயற்சி மேற்கொள்ளும் என்கிறார்கள். இந்நிலையில் திவாலா ஆகி இருக்கும் லேமன் பிரதர்ஸின் நியுயார்க் கட்டிடத்திற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கட்டிடத்தில் இருந்து வெளிவரும் ஊழியர்கள் பெரிய பெரிய அட்டை பெட்டிகளை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் லேமன் பிரதர்ஸ் நிதி வங்கிகளில் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: