நன்றி : தினமலர்
Monday, September 15, 2008
சிங்கூர் பிரச்னையால் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு இல்லை
'சிங்கூர் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஏற் பட்டுள்ள பிரச்னையால், இந்தியாவில் எங்கள் நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் கார் தயாரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள் வோம்' என, மெர்சிடிஸ் உள்ளிட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், சிங்கூரில் உள்ள டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல கார் தயாரிப்பு நிறுவனங் கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன உயரதிகாரி ரய்னெர் ஸ்முக்கெல் கூறுகையில், 'இந்திய கார் சந்தை மீது எங்களுக்கு பலமான நம்பிக்கை உள்ளது. சிறிய ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள் ளோம். சொகுசு கார்களுக் கான தேவை அதிகரித் துள்ளதால், இந்தியாவில் கார் தயாரிப்பு பணி பாதிக் கப்படாது' என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ஹெண்டர்சன் கூறுகையில், 'சிங்கூர் பிரச்னையால் எங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் கார் தயாரிப்புக்காக கூடுதலாக முதலீடு செய்துள் ளோம்' என்றார். நிசான் மோட்டார் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குனர் ஷோகி கிமுரா கூறுகையில், 'இந்தியாவில் எங்கள் தயாரிப்பு திட்டங்களை மேலும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளோம். 'வரும் 2012க்குள் ஒன்பது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றில் ஐந்து மாடல் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment