நவீன தொழில்நுட்பத்துடன் மீனவ தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிலைய திட்டத்தை நிறுவ 'டாடா' நிறுவனத்துடன் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
மீனவர்கள் மீன் பிடிப்பதிலும், மீன்களை சேதமின்றி பதப்படுத்தி விற்கவும், நவீன உத்திகளை கடைபிடித்து, அதிக வருவாய் ஈட்டுவதற்காக, வெளிநாடுகளில் உள்ளது போல கடலில் கூண்டுகளில் மீன் வளர்த்தல், நண்டு வளர்ப்பு போன்றவற்றில் மீனவர்கள் ஈடுபடவும், பாசி வளர்த்தல், மீன் பொருட் களை பதப்படுத்துதல் ஆகியவற்றை பெண் கள் மேற்கொள்ளவும், தேவையான பயிற் சியை அளிக்க, 'நவீன் மீன்பிடி தொழில் நுட்ப பயிற்சி மையம்' ஒன்று அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தை நிறைவேற்ற 'மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம்- பிட்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப் பட்டது. இப்பயிற்சி மையத்தை அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காடு கிராமத்தில் 1.16 எக்டேர் நிலத்தை அசு இலவசமாக வழங்கியது. இத்திட்டத்துக்கு, லாப நோக்கம் ஏதுமின்றி தொழில்நுட்ப உதவி உட்பட அனைத் துவகை உதவிகளையும் வழங்க 'டாடா' நிறுவனம் முன்வந்தது.'டாடா' குழுமத்தின் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று காலை கையெழுத்தானது.
ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் மீன்வளத் துறை முதன்மைச் செயலர் லீனா நாயரும், 'டாடா' சார்பாக கிருஷ்ணகுமாரும் கையெழுத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம், 'டாடா' நிறுவனம் உருவாக்கும் சொத்துக் கள், திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். தமிழக அரசு, மீன்துறை, டாடா நிறுவனம் ஆகியவற்றுக்கும், பயனாளிகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு நிறுவனமாக 'பிட்' சங்கம் செயல்படும். மீனவ தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் பணிக்குரிய செலவுகளை மேற் கொள்ள, முதல்கட்ட உதவியாக ஒரு கோடி ரூபாய்க் கான காசோலையை முதல்வர் கருணாநிதி, இச்சங்கத்தின் கவுரவத் தலைவரான மீன் வளத் துறை முதன்மை செயலர் லீனா நாயரிடம் நேற்று வழங்கினார்.
நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சர் சாமி, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன், மீன்வளத் துறை ஆணையர் சம்பு கல்லோலிகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்றி : தினமலர்
Wednesday, September 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment