Tuesday, September 16, 2008

பங்கு சந்தையில் இன்றும் சரிவு நிலைதான்

அமெரிக்காவின் நிதி நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாததால், மும்பை பங்கு சந்தையில் இன்றும் காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்து வந்த சென்செக்ஸ் , அதிகபட்ச குறைவான 13,051.73 புள்ளிகளில் இருந்து 467 புள்ளிகள் மீண்டு வந்துள்ளது. அதே போல் தேசிய பங்கு சந்தையில் நிப்டி, அதிக பட்ச குறைவான 3,919.35 புள்ளிகளில் இருந்து 155 புள்ளிகள் மீண்டு வந்திருக்கிறது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.47 புள்ளிகள் ( 0.09 சதவீதம் ) மட்டும் குறைந்து 13,518.80 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2 புள்ளிகள் ( 0.05 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,074.90 புள்ளிகளில் முடிந்துள்ளது. காலையில் வேகமாக இறங்கி வந்த பங்கு சந்தை மாலையில் ஏறி வந்ததற்கு காரணம், அப்போது பேங்க் மற்றும் ஆயில் நிறுவன பங்குகள் வேகமாக வாங்கப்பட்டதுதான். கடைசி நேரத்தில் பங்கு சந்தை எழுந்ததில் பெரும் பங்காற்றியது ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., பேங்க், பெல் மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குகள்தான்.
நன்றி : தினமலர்

No comments: