Wednesday, September 17, 2008

அமெரிக்க நிதிச் சந்தையில் பெரும் சுனாமி


நியூயார்க்:அமெரிக்க நிதிச் சந்தையில் தற்போது மையம் கொண்டுள்ள சுனாமியால், உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேமென் பிரதர்ஸ் வங்கி மற்றும் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இன்சூ ரன்ஸ் நிறுவனமான அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதி சுனாமியில் சிக்கி திவால் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதித்துறை வங்கியான லேமென் பிரதர்ஸ் திவாலாகி உலகம் முழு வதும் பொருளாதார சந்தைகளில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு நிதி நிறுவனமான மெரில் லிஞ்ச் கடும் நஷ்டத்தில் சிக்கியது. இதை, பாங்க் ஆப் அமெரிக்கா வாங்க முன்வந்ததையடுத்து பிரச்னை ஓரளவுக்கு தீர்ந்தது.இருப்பினும், அமெரிக்காவின் மேலும் பல வங்கிகள் நிலைமை தள்ளாட்டம் கண்டுள்ளதால், அமெரிக்க நிதிச் சந்தைகளில் மந்தமான சூழ்நிலை நிலவுகிறது. தற்போது, இந்த வரிசையில் அமெரிக்காவின் பிரபல இன்சூரன்ஸ் நிறுவ னமான(ஏ.ஐ.ஜி.,) அமெரிக்க இன்டர்நேஷனல் குரூப் கடும் நிதிச்சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இதில் இருந்து தப் பிக்க, நான்காயிரம் கோடி டாலர் உதவி தேவை என, ஏ.ஐ.ஜி., கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி அதிகாரிகளும், ஜே.பி.மோர்கன் சேஸ் மற்றும் கோல்டுமேன் சாஸ் நிறுவனமும் ஏ.ஐ.ஜி.,யை காப்பாற்ற முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றன. எங்களால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என, நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.ஏ.ஐ.ஜி.,யின் நிலைமை மோசமாகியதை அறிந்ததும் நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. மொத்தம் 60 சதவீத அளவிற்கு விலை சரிந்தது.நலிவடைந்த மெரில் லிஞ்ச் நிதி நிறுவனத்தை ஐந்தாயிரம் கோடி டாலர் கொடுத்து வாங்க பாங்க் ஆப் அமெரிக்கா முன்வந்ததையடுத்து, நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தையில் இதன் பங்குகள் 21.3 சதவீதம் குறைந்தது.நூற்றாண்டுக்கு ஒரு முறை அமெரிக்காவில் இது போன்ற நெருக்கடியை சந்திப்பது வாடிக்கை. நிதிச்சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தீவிர கவனம் செலுத்தப்படும் என அதிபர் புஷ் அறிவித்துள்ளார். இதற்காக, அமெரிக்காவின் பெடரல் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெடரல் வங்கி (நம் நாட்டின் ரிசர்வ் வங்கியை போன்றது) பெருமளவில் நிதியை இறக்க இருக்கிறது.இதற்கிடையில் லேமென் பிரதர்ஸ் வங்கியின் ஆசிய துணை நிறுவனங்களான லேமென் பிரதர்ஸ் ஆசியா லிமிடெட், லேமென் செக்யூரிட்டிஸ் ஆசிய லிமிடெட், லேமென் பிரதர்ஸ் பியூச்சர்ஸ் ஆசிய லிமிடெட் ஆகியவை நேற்று தங்களது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி கொண்டுள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் இந் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், லேமென் பிரதர்ஸ் வங்கியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜப்பான் பங்குச் சந்தையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஜப்பான் பிரதமர் முக் கிய அமைச்சர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து பாங்க் ஆப் ஜப்பான் உடனடியாக இர ண்டாயிரத்து 400 கோடிக்கு ஜப்பான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்தது.ஊழியர்கள் கொதிப்பு: தங்களது வங்கி திவாலாகிவிட்டதால், லேமென் பிரதர்ஸ் வங்கியின் 25 ஆயிரம் ஊழியர்கள் கோபத்தில் உள்ளனர். நியூயார்க் தலைமை அலுவலகத்தில் கூடிய ஊழியர்கள் சிலர், அலுவலகத்தில் தங்களுக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் அட் டை பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதை எண்ணி கவலையடைந்துள்ளனர். அதே சமயம் மெரில் லிஞ்ச் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. திவாலாகாமல் தப்பித்து பாங்க் ஆப் அமெ ரிக்காவுடன் இணைந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் எங்கள் வங்கியை காப்பாற்றிய பாங்க் ஆப் அமெ ரிக்கா பெரிய நிறுவனம் தான் என சில ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மீளவில்லை இந்திய பங்குச் சந்தை:மும்பை: கடும் சரிவை சந்தித்துள்ள இந்திய பங்குச் சந்தை நேற்றும் 300 புள்ளி களுக்கு மேல் சரிவுடன் தான் துவங்கியது. தொடர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங் கினர். இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை சரிவை சந்தித்தன.இன்னும் இறங்குமா, முதலீடு செய்வதற்கு இப்போது ஏற்ற தருணமா என்று பல முதலீட்டாளர்களும் தயங்கி இருந்தனர்.இருப்பினும் சென்செக்ஸ் 13 ஆயிரத்தை நெருங்கிய போது பலரும் துணிச்சலுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.இதன் காரணமாக மதியத் திற்கு மேல் பங்குச் சந்தையில் முன்னேற்றம் தெரிந்தது.'நிப்டி'நான்காயிரம் புள்ளிகளுக்கு கீழாக வந்தது. அதிபர் புஷ் ஷின் அறிவிப்பு, ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் சற்றே ஏற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையிலும் சற்று நம்பிக்கையைக் காண முடிந்தது.இதன் காரணமாக பலரும் ஆர்வமுடன் பங்குகளை வாங்க முன் வந்தனர்.கச்சா எண்ணெய் விலை குறைந்து 93 டாலருக்கும் கீழ் வந்ததால் பெட்ரோலிய துறை பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன.இறுதியில் 'சென்செக்ஸ்' 12 புள்ளிகள் சரிந்து 13 ஆயிரத்து 518 புள்ளிகளிலும், 'நிப்டி' இரண்டு புள்ளிகள் அதிகரித்து நான்காயிரத்து 74 புள்ளிகளிலும் நிலை பெற்றது.அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்ற போதிலும், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ. 20 ஆயிரம் கோடிகளுடன், பங்குச் சந்தை இன்னும் கீழ்நிலைக்கு வரும் என்று காத்து கொண்டு இருக்கின்றன. இப்போதுள்ள நிலையில் சென்செக்ஸ் 12 ஆயிரத்து 500க்கு கீழும், நிப்டி மூன்றாயிரத்து 800க்கு கீழும் செல்வதற்கு வாய்ப்பு இல்லை என பங்குச் சந்தை நோக் கர்கள் கூறுகின்றனர். பொதுவாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படும் நிலை இருப்பதால் அமெ ரிக்காவின் பாதக சாதகங்கள் இங்கும் எதிரொலிக்கிறது.

நன்றி : தினமலர்

No comments: