Monday, August 18, 2008

டெபிட் கார்டை தந்து ஷாப்பிங் செய்வது பாதுகாப்பானதா?: கிரெடிட் கார்டுக்கு உள்ள உத்தரவாதம் இதில் இல்லை

அடுத்தவர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, பணத்தை 'லபக்' செய்வதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்; அடுத்தவர் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறிக்கும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. டில்லியில் ஒரு தம்பதி சமீபத்தில் பிடிபட்டனர். ஷாப்பிங் செய்யும் இடங்கள் மற்றும் வேறு இடங்களில் எப்படியோ அடுத்தவர்களின் டெபிட் கார்டு விவரங்களை அறிந்து கொண்டு, போலி டெபிட் கார்டை தயாரித்து, அதைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கில் இருந்து பணத்தை பறித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு லட்சம் ரூபாய் வரை இவர்கள் பணம் எடுத்துள்ளனர். மற்ற நாடுகளை போல, இந்தியாவில் உள்ள வங்கிகள் தரும் டெபிட் கார்டுகளுக்கு வங்கி உத்தரவாதம் அளிப்பதில்லை; போதிய பாதுகாப்பும் தருவதில்லை. பணத்தை வாடிக்கையாளர் இழந்தால், அதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். கிரெடிட் கார்டுகளில் இருந்து யாராவது பணம் எடுத்தால் அதை கண்டுபிடித்து தர வங்கிகள் உத்தரவாதம் அளிக்கின்றன. கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கும் போதும், பொருட்கள் வாங்கும் போதும் உடனே, மொபைல் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் எச்சரிக்கை அளிக்கின்றன. ஆனால், டெபிட் கார்டு வாடிக்கையாளர் களுக்கு இது போன்ற எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தையும் வங்கிகள் அளிப்பதில்லை. அரசு வங்கிகளும் தனியார் வங்கிகள் போல, டெபிட் கார்டு பிரச்னைகளை சரிவர கையாள முன்வருவதில்லை. இந்தியாவில், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் தான் அதிகம். பெரும் பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை, ஏதாவது ஒரு வங்கி டெபிட் கார்டு மூலம் தான் வழங்குகின்றன. இதனால், கிரெடிட் கார்டுகளை விட, டெபிட் கார்டுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது தொடர்பாக வங்கியியல் நிதி ஆலோசகர்கள் கூறியதாவது: அடுத்தவர் கிரெடிட் கார்டை போலியாக தயாரித்து, அதைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலோ, ஷாப்பிங் செய் தாலோ எளிதில் கண்டுபிடித்து அடுத்த முறை நடக்காமல் தவிர்க்க முடியும். ஆனால்,டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து பணத்தை பறிக்கும் போது கண்டுபிடிப்பது சிரமம் தான். ஷாப்பிங் செய்யும் போது, டெபிட் கார்டை தந்து பணத்தை செலுத்துவது பாதுகாப்பானதல்ல. டெபிட் கார்டை தரும் போது வாடிக்கையாளரிடம் டெபிட் கார்டை தேய்க்கும் மிஷினை தந்து, 'பின்' நம்பரை பதிவு செய்யச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி பல கடைகளில் செய்வதில்லை. இதுவே தவறான முன்மாதிரியாகும். 'பின்' நம்பரை தெரிந்துகொண்டு கடை ஊழியர்களோ, அவர்களின் உதவியுடன் மற்றவர்களோ தவறு செய்ய வழி ஏற்படுகிறது. டெபிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக வங்கிகள் பொறுப்பேற்பதில்லை. அது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதும் இல்லை. வாடிக்கையாளர்கள் தான் இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. வங்கி ஏ.டி.எம்.,களில் டெபிட் கார்டை செருகும் போது, அந்த சிறிய இடத்தில், ஏதாவது மின்காந்த பேப்பர் போன்ற ஏதாவது செருகி வைக்கப்பட்டிருக்கிறதா என்றும் உஷாராக கண்காணித்து, அதன் பின் கார்டை செருகி பணம் எடுக்க வேண்டும். பணம் எடுத்த பின், கார்டை பெற்றுக்கொண்ட பின், பழைய நிலைக்கு கம்ப்யூட்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு நிதி ஆலோசகர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


5 comments:

Subash said...

தீ பறக்கற உஷார் பதிவு. நன்றி

அதோடு Credit Cards வச்சிருக்கறவங்க SMS சர்வீசயும் கேட்டு இணைச்சுக்கோங்க. நீங்க எப்ப கார்ட்ட யுஸ் பண்ணாலும் SMS Alert வரும். இதை இலவசமாகவே வங்கிகளில் குடுப்பார்கள்.

சுபாஷ்
hisubash.wordpress.com

துளசி கோபால் said...

பூனைக்குட்டியும் வாத்துக்குஞ்சும் ஜோரா இருக்கு.


பதிவுக்கு நன்றி.

இப்படி எல்லாத்துக்கும் பயப்பட்டுக்கிட்டே இருக்கணுமுன்னா வாழ்க்கை சுவாரசியப்படுதா? (-:

பாரதி said...

சுபாஷ்,துளசி கோபால் வருகைக்கு நன்றி

//பூனைக்குட்டியும் வாத்துக்குஞ்சும் ஜோரா இருக்கு.//

அது வாத்துக்குஞ்சு அல்ல , கோழி குஞ்சு
உபயோகப்படுத்தும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

நானானி said...

நல்ல தகவல். எவ்வளவு சௌகர்யங்கள் இருக்கின்றனவோ,
அவ்வள்வு ஆபத்துகளும் இருக்கின்றன.
துள்சி சொன்னதுபோல்(வாத்துகுஞ்சும் பூனை பற்றியது அல்ல) பயந்து கொண்டிருந்தால் வாழ்கை சுவாரஸ்யமாயிருக்காதுதான்.

பாரதி said...

நானானி வருகைக்கு நன்றி