Saturday, January 9, 2010

பி.எஸ்.என்.எல்., 'ப்ரீபெய்ட் பிராட் பேண்ட்'

பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்டு பிராட் பேண்ட் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தின் செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல்., ஏற்கனவே கட்டணம் செலுத்தக் கூடிய பிராட் பேண்ட் (அகண்ட அலைவரிசை) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை பி.எஸ்.என்.எல்., இணையதளத்தில் இருந்து 'டவுண் லோடு' செய்து கொள்ளலாம். இச்சேவையை பெற விரும்புவோர், பி.எஸ்.என்.எல்., தரை வழி இணைப்பு மோடம் வைத்திருக்க வேண்டும்.

'ப்ரீ பெய்டு பிராட் பேண்ட்' சேவைக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் கிடையாது. இணைப்பு கொடுக்க 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அறிமுகச் சலுகையாக 30 நாட்களுக்கு இணைப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 50 'எம்பி' இலவச, 'டவுண்லோடு' அளிக்கப்படும். இது 15 நாட்கள் மதிப்பு கொண்டதாக இருக்கும். வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளை, 'ரீ சார்ஜ்' செய்து கொள்ளலாம். டில்லி மற்றும் மும்பையை தவிர நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: