இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியான, ஆக்சிஸ் வங்கி வீட்டு கடனுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 31ம் தேதிக்குள் வாங்கும் கடனுக்கு மட்டும், எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினாலும், முதல் இரண்டு வருடங்களுக்கு 8.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப் படும். அதற்கு பிறகு மாறும் வட்டி விகிதம் விதிக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வீட்டு கடனுக்கான வட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் எனப்படும் வட்டி விகித்தின் அடிப்படியில் வட்டி விதிக்கப்படும்.
இதில் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3.5 சதவீதம் குறைவாக வசூலிக்கப்படும். ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கடனுக்கு மார்டேஜ் ரெபரன்ஸ் ரேட் விட 3 சதவீதத்திற்கும் குறைவாக வட்டி வசூலிக்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment