எஸ்.பி.ஐ., வங்கியின் துணை மேலாண்மை இயக்குனர் மற்றும் குழு நிர்வாகி அனுப் பானர்ஜி கூறியதாவது:
இந்தாண்டு நாங்கள், 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை, கிளர்க் பணியிடங்களுக்கும், 5,500 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கும் நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கிராமப்புறங்களில் வங்கிகளின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் நோக்கில், அங்கு இரண்டாயிரம் புரபேஷனரி அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள் ளோம். தேர்ந்தெடுக்கப் பட உள்ள 5,500 அதிகாரிகளில், 2,000 பேர், கிராமப்புறங்களில் நியமிக்கப்படுவர்.
அவர்கள், அப்பகுதிகளில், குறைந்தது, அடுத்த பத்தாண்டுகளுக்காவது பணியாற்ற வேண்டும். கடந்தாண்டு, எஸ்.பி.ஐ., வங்கி, 25 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்தது.
எஸ்.பி.ஐ., வங்கி இந்தாண்டு புதிதாக ஆயிரம் கிளைகளை திறக்க உள்ளது.
இதனால், இவ்வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 13 ஆயிரமாக அதிகரிக்கும். இந்த நிதியாண்டின் இறுதியில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில், எஸ்.பி.ஐ., வங்கியின் வர்த்தகம் ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அனுப் பானர்ஜி கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment