Friday, December 18, 2009

வாடிக்கை மறந்​தது ஏனோ...

வங்கி ஊழி​யர்​கள் வேலை நிறுத்​தம் செய்​கி​றார்​கள் என்​பது தெரி​யா​மலே சில வாடிக்​கை​யா​ளர்​கள் வழக்​கம் போலவே வங்​கி​க​ளுக்​குச் சென்று புதன்​கி​ழமை பொரிந்து தள்​ளிக் கொண்​டி​ருந்​த​னர்.​ வேலை நிறுத்​தம் செய்​யப்​போ​கி​றோம் என்​பதை ஊழி​யர்​கள்​தான் முன்​கூட்​டியே அறி​வித்​து​வி​டு​கி​றார்​களே,​​ அதைக்​கூட பேப்​ப​ரில் படிக்​கா​ம​லும் டி.வி.யில் கேட்​கா​ம​லும் வங்கி வரை வந்து ஏன்​தான் வயிற்​றெ​ரிச்​சலை கொட்​டிக்​கொள்​கி​றார்​களோ தெரி​ய​வில்லை.​ ​

​ ​ இந்த முறை வங்கி ஊழி​யர்​க​ளின் வேலை நிறுத்​தம் திங்​கள் அல்​லது வெள்​ளிக்​கி​ழ​மை​யாக அல்​லா​மல் புதன்​கி​ழ​மை​யைத் தேர்வு செய்​தது ஏன் என்று புரி​யா​மல் சிறிது நேரம் குழம்​பி​னேன்.​

​ அரு​கில் இருந்த மூத்த வாடிக்​கை​யா​ளர் ஒரு​வ​ரைக் கேட்​டேன்.​ பொன் அகப்​பட்​டா​லும் புதன் அகப்​ப​டாது என்​பார்​கள் அத​னால்​தான் புதன்​கி​ழ​மை​யைத் தேர்ந்​தெ​டுத்​தி​ருக்​கி​றார்​கள் என்​றார் அவர்.​

​ மற்​றொ​ரு​வர் சொன்​னார்,​​ மார்​கழி மாத ஆரம்​பம்,​​ கோயி​லுக்​குப் போவ​தற்​காக வங்கி ஊழி​யர்​கள் இந்த நாளைத் தேர்ந்​தெ​டுத்​தி​ருக்​க​லாம் என்​றார்.​ இது அதை​விட அபத்​த​மாக இருந்​தது.​ ​

​ வங்கி ஊழி​யர்​கள் கடு​மை​யாக வேலை செய்து களைத்து,​​ ​ வீட்​டுக்​குப்​போய் அங்​கும் வேலை செய்​து​விட்​டுப் படுத்து,​​ காலை​யில் எழுந்​தி​ருப்​ப​தற்கே சுமார் 7 அல்​லது 8 மணி ஆகி​வி​டும்.​ அப்​ப​டி​யி​ருக்க விடி​யற்​காலை பூஜைக்​காக அவர்​கள் இந்த நாளைத் தேர்ந்​தெ​டுத்​தார்​கள் என்​ப​தும் சரி​யல்ல.​ ​

​ சனி,​ஞாயிறு விடு​மு​றை​யோடு சேர்ந்தே வெள்ளி,​​ திங்​கள் ஆகிய நாள்​களை வேலை நிறுத்​தத்​துக்​குத் தேர்வு செய்​கி​றார்​கள் என்று வங்கி ஊழி​யர்​க​ளைப் பற்றி முன்​னர் குறை கூறப்​பட்​டது.​ அப்​ப​டி​யெல்​லாம் தாங்​கள் சுய நல​மி​கள் அல்​லர் என்று காட்​டவே வாரத்​தின் நடு நாளைத் தேர்ந்​தெ​டுத்​தார்​களோ என்​னவோ?​ இது​வும் ஒரு கணக்​குத்​தான்.​

​ வங்கி ஊழி​யர்​கள் எப்​போது வேலை நிறுத்​தம் செய்​தா​லும் அவர்​க​ளு​டைய கோரிக்கை பொது​ந​லன் சார்ந்​த​தா​க​வும் வலு​வா​ன​தா​க​வும் ஏகா​தி​பத்​திய,​​ முத​லா​ளித்​துவ,​​ மத​வாத,​​ திரி​பு​வாத,​​ பிற்​போக்கு சக்​தி​க​ளுக்கு எதி​ரா​ன​தா​க​வும்​தான் இருக்​கும்.​

​ இந்த முறை பாரத ஸ்டேட் வங்​கி​யு​டன் இந்​தூர் ஸ்டேட் வங்​கி​யைச் சேர்க்​கக்​கூ​டாது என்​பது முக்​கிய கோரிக்கை.​ இதன் உள்ளே நாம் புக வேண்​டாம்.​ ​(அதன் நுட்​பம் நமக்​குத் தெரி​யாது.)​

​ அப்​படி இணைத்​தால் ஏழு கடல்​க​ளும் பொங்​கும்,​​ கட​லில் சுனாமி ஏற்​ப​டும்,​திரு​வண்​ணா​மலை,​​ பரங்​கி​மலை,​​ மதுரை திருப்​ப​ரங்​குன்​றத்​துக்கு அரு​கில் உள்ள பசு​மலை போன்​ற​வை​கூட எரி​ம​லை​க​ளாகி நெருப்​பைக் கக்​கும்,​​ கடு​மை​யான நில அதிர்வு ஏற்​ப​டும் என்​றெல்​லாம் புரி​கி​றது.​ ​

​ அடுத்​தது வங்கி நிர்​வாக நடை​மு​றை​க​ளைச் சீர்​தி​ருத்த வேண்​டும் என்​பது.​ இது​வும் உண்​மை​யி​லேயே வலி​யு​றுத்​தப்​பட வேண்​டிய கோரிக்​கை​தான்.​ நம் பங்​குக்கு நாமும் சில கோரிக்​கை​க​ளைத் தெரி​விக்​க​லாம் என்று நினைக்​கி​றேன்.​ இதை அடுத்த வேலை நிறுத்​தத்​துக்கு வங்கி ஊழி​யர் சங்​கங்​க​ளின் நிர்​வா​கி​கள் பரிசீ​லித்​தால் போது​மா​னது.​

​ வங்​கி​க​ளுக்​குள் வாடிக்​கை​யா​ளர்​கள் வரு​வ​தைத் தவிர்ப்​ப​தற்​கா​கத்​தான் ஏ.டி.எம்.​ என்ற மெஷின் ஆங்​காங்கே வைக்​கப்​ப​டு​கி​றது.​ அப்​படி இருந்​தும் சில அராத்​து​கள் வங்​கி​க​ளுக்கு உள்ளே வந்து பணம் எடுக்க முற்​ப​டு​வதை முற்​றி​லும் தடுக்​கும் வகை​யில் வங்​கி​க​ளில் பணம் போட​லாமே தவிர எடுப்​ப​தற்​காக உள்ளே நுழை​யவே கூடாது என்ற கோரிக்​கையை சேர்த்​துக் கொள்​ள​லாம்.​

​ இப்​போது சென்​னை​யி​லும் புற​ந​கர்​க​ளி​லும் பணம் எடுக்​கப் போகும் வாடிக்​கை​யா​ளர்​க​ளி​டம் கூறப்​ப​டும் முதல் உப​தே​சமே,​​ ஏ.டி.எம்.​ கார்டு வாங்​குங்க,​​ எங்க கிட்​டயே வர வேண்​டாம்,​​ அப்​ப​டியே பணம் எடுத்​துக்​கொண்டு ​(திரும்​பிப்​பார்க்​கா​மல்)​ போயி​டுங்க என்​ப​து​தான்.​

​ அடுத்​தது பென்​ஷன் அக்​க​வுண்ட்,​​ அடிக்​கடி 300,​ 500 என்று எடுக்​கும் எஸ்.பி.​ அக்​க​வுண்ட்,​​ வங்​கிக்கு பெரிய லாபம் தராத கரண்ட் அக்​க​வுண்ட் ஆகி​ய​வற்​றை​யெல்​லாம் தானி​யங்கி மெஷின்​களே கையாள வேண்​டும் என்ற கோரிக்​கையை வலி​யு​றுத்​த​லாம்.​

வங்​கிக்கு வாடிக்​கை​யா​ளர்​களே வேண்​டாம் என்​ப​தல்ல நோக்​கம்;​ சுய​நி​திக் கல்​லூரி,​​ பள்​ளிக்​கூட நிறு​வ​னர்​கள்,​வியா​பா​ரி​கள்,​பஸ் முத​லா​ளி​கள்,​​ டிரா​வல்ஸ் நடத்​து​கி​ற​வர்​கள்,​40 வய​துக்​குள்​பட்ட வாடிக்​கை​யா​ளர்​கள்,​சுய உத​விக்​குழு மக​ளிர்,​​ வரு​மா​ன​வ​ரித்​துறை,​​ கலால் துறை,​​ ரயில்​வே​யில் டிக்​கெட் ரிசர்​வே​ஷ​னுக்கு உத​வக் கூடி​ய​வர்​கள் போன்ற வங்கி ஊழி​யர்​க​ளுக்​கும் ஏதா​வது பலன்​த​ரக் கூடிய வாடிக்​கை​யா​ளர்​கள் வரு​வதை வங்கி ஊழி​யர்​கள் வேண்​டாம் என்று சொல்​லப்​போ​வ​தில்லை.​

​ ​ பணம் எடுப்​ப​தற்​கான சலா​னில் தேதி போட மறப்​ப​வர்​கள்,​​ பணம் செலுத்​தும்​போது டினா​மி​னே​ஷன் சரி​யா​கப் போடத் தெரி​யா​த​வர்​கள்,​​ வங்கி ஊழி​யர் மெனக்​கெ​டவே அவ​சி​யம் இல்​லாத வகை​யில் தன் வேலை​யைத் தானே பார்த்​துக் கொள்ள முடி​யா​த​வர்​கள்,​​ காலை​யில் வங்​கி​யில் நுழைந்​தால் சாயங்​கா​லம் வரை காத்​தி​ருந்து வேலையை முடித்​துக் கொள்​ளும் அள​வுக்​குப் பொறுமை இல்​லா​த​வர்​கள் வங்​கிக்கு வரவே கூடாது.​

​ ​ பணம் எடுக்க அல்​லது போட ஒரு முறை​யும்,​​ என்ட்ரி போட ஒரு முறை​யும் வேலைக்கு விடு​முறை எடுத்​துக்​கொண்டு வரக்​கூ​டிய நல்ல பழக்​கம் உள்​ள​வர்​கள் தாரா​ள​மாக வங்​கிக்கு வர​லாம்.​

​ வேலை நேரத்​தில் வங்கி ஊழி​யர்​கள் சீட்​டில் இல்​லா​மல் போனால் ஆட்​சே​பம் தெரி​விக்​கி​ற​வர்​க​ளும்,​​ வம்பு பேசும்​போது நாக​ரி​கம் இல்​லா​மல் குறுக்​கிட்டு,​​ ""நாங்க வேலைக்​குப் போக வேண்​டாமா?​'' என்று அப​சு​ர​மாக அங்​க​லாய்ப்​ப​வர்​க​ளும்,​​ செல் போனில் அழைப்பு வந்​தால் கேஷி​யர் உள்​பட யாருமே சீட்​டில் உட்​கார்ந்து பேசி​னா​லும் வெளியே போனா​லும் கூக்​கு​ரல் எழுப்​பு​கி​ற​வர்​க​ளும்,​​ ""உங்க பேங்கே தண்​டம்,​​ எத்​தனை மணி நேரம் காத்​தி​ருக்​கி​றது?​'' என்று சாபம் கொடுப்​ப​வர்​க​ளும் எந்த அரசு வங்​கி​யி​லும் கணக்கு வைத்​துக்​கொள்​ளவே கூடாது என்று வங்கி நடை​மு​றைச் சட்​டத்​தில் திருத்​தமே கொண்​டு​வ​ர​லாம்.​

​ ​ ​ வங்கி ஊழி​யர்​கள் வேலை நேரத்​தில் வேலை​தான் செய்ய வேண்​டும்,​​ திடீர் திடீ​ரென ஸ்டி​ரைக் செய்​யக் கூடாது என்​றெல்​லாம் சுய​ந​ல​மாக நினைக்​கிற வாடிக்​கை​யா​ளர்​களை கணக்கு வைத்​துக் கொள்​ளா​மல் நீக்​கி​வி​டும் அதி​கா​ரம் வங்கி ஊழி​யர்​கள் சங்​கத்​துக்கே தரப்​பட வேண்​டும்.​ இந்த சீர்​தி​ருத்​தங்​கள் அம​லா​னால் வங்​கி​கள் சம​ர​சம் உலா​வும் இட​மாக இருக்​கும் என்​ப​தில் சந்​தே​கம் இருக்​கி​றதா உங்​க​ளுக்கு?
கட்டுரையாளர் : ராணிப்​பேட்டை ரங்​கன்
நன்றி : தினமணி

2 comments:

thendral said...

இந்த மொக்கைதானே வேணாம்
எந்த நிறுவனமாக இருந்தாலும் திர்ப்திபடுதமுடியாத ஒருவர் யார் என்றால் அவர் வாடிக் கை யா லார்தான் .அவரும் எங்கு போனாலும் திருந்தவும் மாட்டார் ,திருப்தி பாடவும் மாட்டார் .அதனால் தான் அவர் திட்டுவார , போகமாட்டார் .
மற்ற அரசு இடங்களில் வாங்கிய அவமானங்களை இங்கு கொட்டுவர்

பாரதி said...

thendral ,thanks for your comments.