Saturday, December 5, 2009

ஒற்றுமை நீங்கிடில்...

ஒரு வழி​யாக ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு, பெல்​ஜி​யப் பிர​த​மர் ஹெர்​மன் வேன் ரோம்​பையை ஐரோப்​பி​யக் கவுன்சி​லின் நிரந்​தர அதி​ப​ரா​கத் தேர்ந்​தெ​டுத்​துத் தொடர்ந்து கொண்​டி​ருந்த சர்ச்​சைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​தி​ருக்​கி​றது. இந்​தத் தேர்​வுக்​குப் பின்​னில் நடந்த அர​சி​யல் மற்​றும் கூட்டு ராஜ​தந்​தி​ரப் போட்​டி​கள் ஏரா​ளம் ஏரா​ளம். அதை​யெல்​லாம் மீறி,​ ஒரு முடிவு ஏற்​பட்​டி​ருக்​கி​றது என்​றால் அதற்கு சுவீ​டன் பிர​த​மர் ஃபி​ர​ட​ரிக் ரெய்ன்​பெல்ட்​டைப் பாராட்​டா​மல் இருக்க முடி​யாது.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது ஒரு நீண்​ட​நாள் கனவு. ஒன்​றோடு ஒன்று போர் தொடுத்​துக் கொண்​டி​ருந்த சரித்​தி​ரம்​தான் ஐரோப்​பிய நாடு​க​ளுக்கு உண்டு. தங்​க​ளுக்​குள் உள்ள வேறு​பா​டு​க​ளை​யும்,​ போட்​டி​க​ளை​யும் மறந்து ஒன்​றா​கக் கைகோர்த்​துக் கொண்​டாக வேண்​டும் என்​கிற எண்​ணத்​துக்கு முதலில் வித்​திட்​டது இரண்​டாம் உல​கப் போர். ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​புக்கு வித்​திட்​டது அர​சி​ய​லும்,​ ஒற்​றுமை உணர்​வும் என்​ப​தை​விட வியா​பா​ர​மும்,​ பொரு​ளா​தா​ர​மும் என்​ப​து​தான் நிஜம்.

1950-ல் ஐரோப்​பிய நிலக்​கரி மற்​றும் எஃகு உற்​பத்​தி​யா​ளர்​கள்​தான் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​கிற எண்​ணத்​துக்​குப் பிள்​ளை​யார் சுழி போட்​ட​வர்​கள். தங்​க​ளது வியா​பா​ரம் தங்கு தடை​யின்றி நடை​பெற்று செழிப்​ப​தற்கு ஐரோப்​பா​வில் அமை​தி​யும் ஒற்​று​மை​யும் நிலவ வேண்​டும் என்​பதை உணர்ந்த நிலக்​கரி மற்​றும் எஃகு உற்​பத்​தி​யா​ளர்​க​ளின் முயற்​சி​யின் விளை​வாக பெல்​ஜி​யம்,​ பிரான்ஸ்,​ ஜெர்​மனி,​ இத்தாலி,​ லக்​சம்​பர்க் மற்​றும் நெதர்​லாந்து ஆகிய ஆறு நாடு​கள் இணைந்து உரு​வாக்​கிய ஐரோப்​பி​யப் பொரு​ளா​தார ஒருங்​கி​ணைப்​பு​தான் இன்று ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பாக உரு​வாகி இருக்​கி​றது.

1973-ல் டென்​மார்க்,​ அயர்​லாந்து மற்​றும் இங்​கி​லாந்து ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பில் இணைந்​தது. எண்​ப​து​க​ளில் கிரீஸ்,​ ஸ்பெ​யின் மற்​றும் போர்ச்​சு​க​லும் இணைந்​த​போது,​ ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது ஒரு வலு​வான பொரு​ளா​தார அமைப்​பா​க​வும்,​ பல​மான சக்​தி​யா​க​வும் உரு​வா​கும் வாய்ப்​பு​கள் ஏற்​பட்​டன. தங்​க​ளது எல்​லை​க​ளைப் பரஸ்​பர வர்த்​த​கத்​துக்​கும்,​ பய​ணங்​க​ளுக்​கும் உடைத்து எறிந்​து,​ ஐரோப்​பாவை ஓர் ஒட்​டு​மொத்த சந்​தை​யாக உரு​வாக்​கும் முயற்​சி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. கிழக்கு மற்​றும் மேற்கு ஜெர்​ம​னி​யின் இணைப்​பும்,​ ஆஸ்​தி​ரியா,​ ஃபின்​லாந்து,​ சுவீ​டன் போன்ற நாடு​கள் உறுப்​பி​னர்​க​ளா​கச் சேர்ந்​த​தும் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​புக்கு மேலும் வலு சேர்த்​தன.

சு​மார் பத்து கிழக்கு ஐரோப்​பிய நாடு​க​ளும் பொது​வு​டை​மைத் தத்​து​வத்​தைக் கைவிட்டு சந்​தைப் பொரு​ளா​தா​ரத்​துக்​குத் தயா​ரா​ன​து​டன்,​ ஐரோப்​பி​யக் கட்​ட​மைப்பு மேலும் வலு​வ​டைந்து பல்​கே​ரியா மற்​றும் ருமே​னியா போன்ற நாடு​க​ளும் தங்​க​ளைக் கூட்​ட​மைப்​பில் இணைத்​துக் கொண்​ட​போது,​ 27 நாடு​க​ளு​டன் வல்​ல​ர​சான அமெ​ரிக்​கா​வுக்கே சவால் விடும் அள​வுக்கு ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பு பலம் வாய்ந்​த​தா​கக் காட்சி அளிக்​கி​றது.

பொது நாண​ய​மாக "யூரோ' ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு நாடு​க​ளில் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​ட​தற்​குப் பிறகு,​ டால​ருக்​குப் போட்​டி​யாக உலக அரங்​கில் யூரோ தன்னை நிலை​நி​றுத்​திக் கொண்​டி​ருக்​கி​றது என்​ப​தும்,​ சீனா​வுக்​கும்,​ அமெ​ரிக்​கா​வுக்​கும் நிக​ரான வல்​ல​ர​சாக ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு காட்சி அளிக்​கி​றது என்​ப​தும் மறுக்க இய​லாத யதார்த்​தம்.

இந்த நிலை​யில்​தான்,​ ஐரோப்​பி​யக் கௌன்சி​லின் நிரந்​தர அதி​ப​ராக ஒரு​வ​ரைத் தேர்ந்​தெ​டுத்து,​ கூட்​ட​மைப்பை வலுப்​ப​டுத்​தும் முயற்​சி​யில் அவ​ருக்கு முழு அதி​கா​ரம் அளிப்​பது என்​கிற முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்​தப் பத​வி​யில் முன்​னாள் பிரிட்​டிஷ் பிர​த​மர் டோனி பிளே​யரை நிய​மித்து விட்​டால்,​ தனது நன்​மை​கள் பாது​காக்​கப்​ப​டும் என்று அமெ​ரிக்​கா​ கரு​தியதில் ஆச்​ச​ரி​யம் ஒன்​று​மில்லை.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பில் அங்​கம் வகிக்​கும் பல நாடு​கள் ஒரு பல​மான நிரந்​த​ரப் பத​வி​யில் டோனி பிளே​ய​ரைப் போன்ற உலக நாடு​க​ளு​டன் நட்​பு​ற​வுள்ள பிர​மு​கர் ஒரு​வர் அமர்​வதை விரும்​ப​வில்லை என்​பது ஒரு​பு​றம். மேலும்,​ ஜெர்​மன் அதி​பர் அன்​ஜெலா மெர்க்​க​லும்,​ பிரெஞ்சு அதி​பர் நிக்​கோ​லஸ் சர்க்​கோ​சி​யும்,​ டோனி பிளே​ய​ருக்கு எதி​ராக மறை​மு​க​மா​கக் காயை நகர்த்​தி​னர் என்​ப​து மறுபுறம்.

ந​டந்து முடிந்த தேர்வின் பின்​ன​ணி​யில் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு எதிர்​கொள்​ளும் உறுப்​பி​னர் நாடு​க​ளுக்கு இடை​யே​யான மன​மாச்​சா​ரி​யங்​கள் வெளிப்​பட்​டுள்​ளன. முக்​கி​ய​மான பிரச்​னை​க​ளில் இப்​போ​தும் உறுப்​பி​னர் நாடு​கள்,​ தங்​க​ளது நல​னின் அடிப்​ப​டை​யில் ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பை அணு​கு​கி​றார்​களே ஒழிய அதைத் தங்​கள் அனை​வ​ருக்​கும் பொது​வான ஒட்​டு​மொத்த அமைப்​பா​க​வும்,​ ஒற்​று​மை​யின் அடை​யா​ள​மா​க​வும் ​பார்ப்​ப​தில்லை என்று தெரி​கி​றது.

இந்​தியா அணி​சேரா நாடு​க​ளுக்​குத் தலைமை வகித்து நடத்​தும் தைரி​யத்​தை​யும்,​ தார்​மிக உரி​மை​யை​யும் இழந்​து​விட்ட நிலை​யில்,​ ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்​பின் முக்​கி​யத்​து​வம் இன்​றி​ய​மை​யா​தது.

ஐ​ரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு என்​பது அமெ​ரிக்​கா​வும் சீனா​வும் இரண்டு வல்​ல​ர​சு​க​ளாக வளர்ந்து வரும் சூழ​லில்,​ உலக அமை​தி​யை​யும்,​ பொரு​ளா​தார சமத்​து​வத்​தை​யும் நிலை​நாட்ட மிக​வும் அவ​சி​யம்.

சக்தி வாய்ந்த ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு உரு​வா​னால் மட்​டுமே சீனா​வும்,​ அமெ​ரிக்​கா​வும் போட்​டியோ,​ எதிர்ப்போ இல்​லாத பொரு​ளா​தார வல்​ல​ர​சுகளா​க​வும்,​ ஏகா​தி​பத்​திய சக்​தி​க​ளா​க​வும் உரு​வா​கா​மல் தடுக்க முடி​யும். இதை ஐரோப்​பி​யக் கூட்​ட​மைப்பு நாடு​கள் உணர்ந்து செயல்​ப​டு​வ​து​தான் உல​கின் வருங்​கால நன்​மைக்கு உத்​தி​ர​வா​த​மாக இருக்​கும்!
நன்றி : தினமணி

No comments: