நன்றி : தினமலர்
Wednesday, September 2, 2009
ஏழரை கோடி ரூபாய் செலவில் சென்னையில் சினிப்ளக்ஸ் தியேட்டர்
சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் எட்டு நவீன சினிப்ளக்ஸ் தியேட்டர்கள், வரும் ஜனவரியில் திறக்கப்படுகின்றன. இது குறித்து சத்யம் சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி டேன் நகரோன்கா, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் ஆறு மாடிகளுடன் 10 லட்சம் சதுரடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அவென்யூவில் நான்கு மாடிகளில் சில்லரை வணிக வளாகங்கள், உணவகத்துடன் கூடிய பொழுது போக்கு பூங்காங்களும் சர்வதேச தரத்துடன் அமையவுள்ளன. இந்த வளாகத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில், எட்டு சினிப்ளக்ஸ் தியேட்டர்கள் அமையவுள்ளன. இதற்காக எக்ஸ்பிரஸ் அவென்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், இரண்டு பெரிய தியேட்டர்களும், ஆறு சிறிய தியேட்டர்களும் ஏழரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. இவை, 2010ம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு டேன் நகரோன்கா கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment