நன்றி : தினமலர்
Saturday, August 8, 2009
அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது
அமெரிக்காவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவுவதால், மாதா மாதம் லட்சக்கணக்கானவர்கள் புதிது புதிதாக வேலையை இழந்து கொண்டே இருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 2,47,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான அளவுதான் என்று அங்கு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த அளவினரே வேலையை இழந்திருப்பதால் ஜூன் மாதத்தில் 9.5 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, ஜூலை மாதத்தில் 9.4 சதவீதமாக குறைந்திருக்கிறது. 2008 ஏப்ரலுக்குப்பின் இப்போதுதான் முதல் முறையாக வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.1 சதவீதம் குறைந்திருக்கிறதாம். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பாரக் ஒபாமா, வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்திருப்பது, நம் நாடு பொருளாதார சீரழிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கான அடையாளம்தான் என்றார். இருந்தாலும் நாம் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் கூட வேலையை இழக்கவில்லை என்ற செய்தி வரும் வரை நாம் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது என்றார் அவர். 2007 டிசம்பரில் பொருளாதார சீரழிவு ஆரம்பமானதில் இருந்து அமெரிக்காவில் 67 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிறது தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கை. நான் அதிபராக பொறுப்பேற்றிருந்தபோது இருந்ததை விட இப்போது வேலையில்லாதோர் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கிறது என்று சொன்ன ஒபாமா, பொருளாதார சிஸ்டத்தை நாம் சிக்கலில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றார். கடும் சீரழிவில் இருந்து மீட்டிருக்கிறோமே ஒழிய வளர்ச்சியடைய செய்யவில்லை. எனவே மீண்டும் முன்புபோல் வளருவதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்றார். முன்னதாக, ஜூலை மாதத்தில் விவசாயம் அல்லதாத துறையில் 3,20,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும், வேலையில்லாதோர் எண்ணிக்கை 9.6 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. அது பொய்த்து விட்டது. மொத்தம் வேலை இழந்த 2,47,000 பேரில், உற்பத்தி துறையில் 52,000 பேர் மட்டுமே வேலையை இழந்திருக்கிறார்கள். கடந்த செப்டம்பருக்குப்பின் இப்போது தான் முதல் தடவையாக ஒரு லட்சத்துக்கும் குறையானவர்கள் இந்த துறையில் வேலையை இழந்திருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்கள் வேலையை இழந்து வந்தாலும், இன்னொரு பக்கம் புதிய வேலைவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி மற்றும் மருத்துவ சேவை துறையில் ஜூலை மாதத்தில் புதிதாக 17,000 பேர் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள். அதே போல கட்டுமான துறையில் 76,000 பேர் வேலையை இழந்திருந்தாலும் அது எதிர்பார்த்ததை விட மிக குறைவு தான் என்கிறார்கள். ஜூன் மாதத்தில் 18.53 டாலராக ( சுமார் ரூ.890 ) இருந்த அமெரிக்கர்களின் சராசரி ஒரு மணி நேர வருவானம், ஜூலை மாதத்தில் 18.56 டாலராக ( சுமார் ரூ.891 ) உயர்ந்திருக்கிறது.
Labels:
தகவல்,
வேலை வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment