Tuesday, July 21, 2009

எண்ணெய் நிறுவனங்களுக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் கடன் ரூ.950 கோடி

இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.950 கோடிக்கு மேல் கடன் வைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த கடனை பெறுவதற்காக மத்திய அரசு, பேங்க் கியாரன்டி எதையும் பெறவில்லை. பார்லிமென்டில் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா இதனை தெரிவித்தார். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.599 கோடியும், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனுக்கு ரூ.314 கோடியும், இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.37.36 கோடியும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பாக்கி வைத்திருக்கிறது என்றார் முரளி தியோரா. இந்த நிதி ஆண்டின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்ததால் விமானங்களுக்கான எரிபொருளின் விலையும் உயத்தப்பட்டது. அதிலிருந்து இந்த கடன் தொகை அதிகரித்துக்கொண்டே வந்து இப்போது ரூ.950 கோடிக்கு மேல் போய் விட்டது.
நன்றி : தினமலர்


No comments: