Wednesday, July 15, 2009

2008 ல் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.2.5 லட்சம் கோடி

உலகம் கடும் பொருளாதார சிக்கலில் இருக்கும் போதும் கூட, வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் 2008 ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ( ரூ.2.5 லட்சம் கோடி ) 52 பில்லியன் டாலர் என்கிறது உலக வங்கி . இது, அதற்கு முந்தைய ஆண்டு அனுப்பப்பட்ட ( ரூ. 2.16 லட்சம் கோடி ) 45 பில்லியன் டாலரை விட 15 சதவீதம் அதிகம். உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் ஏற்றுமதி மூலம் 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு 47 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்திருக்கும் போது, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மூலம் 52 பில்லியன் டாலர் கிடைத்திருப்பதால், அந்நிய பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதில் முதல் இடத்தை அவர்களே பெறுகிறார்கள். ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பை விடவும் இந்தியாவுக்குள் அதிகம் டாலர்கள் வெளிநாட்டு இந்தியர்களால் வந்திருக்கிறது. முன்னேறும் நாடுகளை பொறுத்தவரை, இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிகோ நாட்டவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் சம்பாதித்து தங்கள் நாட்டுக்கு அதிகம் பணத்தை அனுப்புவதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: