Friday, June 5, 2009

ஹம்மர் மாடல் தொழிற்சாலையை சீன நிறுவனத்திற்கு விற்கும் ஜெனரல் மோட்டார்ஸ்

கடந்த திங்கள் அன்று திவால் நோட்டீஸ் கொடுத்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் ஹம்மர் மாடல் தயாரிப்பு தொழிற்சாலையை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்கிறது. ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிக்கும் மாடல்களில் நான்கு மாடல்களால் லாபம் ஒன்றும் இல்லை. எனவே அந்த நான்கு மாடல்களின் தயாரிப்பை நிறுத்தி விட்டு நஷ்டத்தை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அந்த நான்கு மாடல்களில் ஹம்மர் மாடலும் ஒன்று. இப்போது அந்த ஹம்மர் மாடல் தயாரிப்பை மட்டும் சிசுவாங் டெங்சோங் ஹெவி இன்டஸ்டிரியல் மெஷினரி கம்பெனி என்ற சீன நிறுவனத்திற்கு விற்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. இது சம்பந்தமாக இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றன. ஹம்மரின் சீனியர் நிர்வாகத்துறையை அப்படியே எடுத்துக் கொள்வதாகவும் சீன நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எவ்வளவு தொகைக்கு ஹம்மர் தொழிற்சாலை விற்கப்படுகிறது என்று தெரியவில்லை என்றாலும் பணமாக மட்டும் 100 மில்லியன் டாலர் வரை கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. அது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஹம்மர் தொழிற்சாலை சீன நிறுவனத்திற்கு விற்கப்பட்டால், சீன நிறுவனம் ஒன்று அமெரிக்க கார் கம்பெனியை வாங்குவது இதுதான் முதல் முறையாக இருக்கும்.
நன்றி : தினமலர்


No comments: