நன்றி : தினமலர்
Thursday, June 25, 2009
ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் : மன்மோகன் சிங்
ஏர் - இந்தியாவின் எல்லா சுமைகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக ஏர் - இந்தியா நிறுவனம், கடுமையான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். நிர்வாகத்துறையில், நிதித்துறையில் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையில் பல மாறுதல்களை ஏர் - இந்தியா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த ஏர் - இந்தியா அதிகாரிகள், ஒரு ஏர்லைன்ஸ் சிரமத்திற்குள்ளாகும் போதெல்லாம் ஒரு அரசாங்கத்தால் உதவிக் கொண்டிருக்க முடியாதுதான் என்றனர். இது குறித்து பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல், குறுகிய கால மற்றும் நீண்ட கால நோக்கில் செலவை குறைத்து வருமானத்தை பெருக்க ஏர் - இந்தியா பல கண்டிப்பான நடவடிக்கைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார். ஏர் - இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கடும் நிதி நெருக்கடி குறித்து நேற்று பிரதமர் மன்மோகன்சிங்குடன், பிரபுல் பட்டேல், மூத்த அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஏர் - இந்தியாவின் புதிய சிஎம்டி அர்விந்த் ஜாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். ஊழியர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்லாது, அவர்களது சம்பளம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவைகளில் பல தேவையில்லாத விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை உடனடியாக நீக்க வேண்டியிருக்கிறது என்றார் பிரபுல் பட்டேல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment