Friday, June 19, 2009

இந்திய நிறுவனங்களால் 3 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைச்சிருக்கு

அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகள் எல்லாம் இந்தியாவுக்கே போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று புலம்பிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களின் பார்வைக்கு ஒரு ஆச்சரியமான தகவலை ' இன்டியா பிராண்ட் ஈக்வட்டி ஃபவுண்டேஷன் ' என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருக்கும் இந்திய நிறுவனங்களால் 2004 - 07 காலத்தில் 3,00,000 அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த தகவல். வாஷிங்டனில் அந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா, 2004 - 07 காலத்தில் இந்திய நிறுவனங்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர்கள் கிடைத்திருக்கிறது என்றார். இந்தியர்களால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 10,500 கோடி டாலர் வந்து கொண்டிருக்கும் நிலையில்தான், 5,000 கோடி டாலர் அளவுக்கு இந்தியாவில் நடக்கும் அவுட்சோர்சிங் வேலையையும் அமெரிக்கர்களுக்கே கொடுங்கள் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட, பெங்களுருக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் அவுட்சோர்சிங் வேலையை பஃப்பல்லோவுக்கு கொடுத்தால் என்ன என்று கேட்கிறார்.
நன்றி : தினமலர்


No comments: