பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளை ஒப்பிடும் போது அதிக வலி ஏற்படாத செயலாக அமைந்தது. அடுத்து வரும் 2009-2010ம் ஆண்டுகளில் மொத்த வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும். உலகச் சந்தை நிலவரங்களைப் பார்த்தால் இன்னமும் அபாயம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் ஏற்கனவே அளிக்கப்பட்ட ஊக்குவிப்புகளை வைத்து நாம் எப்படிச் செயல்படுகிறமோ, அதைப் பொறுத்து பலன் கிடைக்கும்.
உலக நாடுகளில், தொழில்துறை தேக்கம் ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. அதே சமயம், திருப்பிச் செலுத்தப்படாத கடன் வங்கிகளில், தேக்கம் அதிகமாக வாய்ப்பு உண்டு. ஆனால், பெரிய அளவு நடைமுறைப் பாதிப்பை ஏற்படுத்தி விடாது.
அதே சமயம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, அதைத் தொடர்ந்து நிதி ஊக்குவிப்புச் சலுகைகள் அளித்த செயல் மற்றும் ஆறாவது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியது என்று எல்லாம் சேர்ந்து கிராமப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவித்திருக்கிறது. இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்
1 comment:
அருமையான பதிவு சகா..
இன்றுதான் முதல் தடவை வருகை தருவது உங்கள் பக்கம்.{முதல் வருகையிலேயே பின்னூட்டம் போட வைத்துவிட்டீர்கள் வாழ்த்துருக்கள்! தொடருங்கள் சந்திப்போம்}
அப்படியே, நம்ம பக்கம் கொஞ்சம் வாங்க..
Post a Comment