Monday, April 6, 2009

கடனை அடைக்க நிதி திரட்டுவதை தள்ளிப்போட்டது டாடா மோட்டார்ஸ்

வங்கியில் வாங்கியிருக்கும் ' பிரிட்ஜ் லோனை ' அடைப்பதற்காக 2 பில்லியன் டாலர்கள் நிதியை திரட்ட தீர்மானித்திருந்த டாடா மோட்டார்ஸ், அந்த திட்டத்தை தள்ளி வைத்திருக்கிறது. டாடா நிறுவனங்களின் பங்குகளை வெளிநாடுகளில் விற்பனை செய்தும், சில முதலீடுகளை விற்பனை செய்தும் 2 பில்லியன் டாலர்களை திரட்டி, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளை வாங்கியதற்கு வாங்கியிருக்கும் கடனை அடைக்க எண்ணியிருந்த டாடா மோட்டார்ஸ், அந்த திட்டத்தை இப்போது தள்ளி வைத்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த பிரிட்டிஷ் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்க, டாடா மோட்டார்ஸ் 3 பில்லியன் டாலர்களை வங்கியில் ' பிரிட்ஜ் லோனாக ' வாங்கியிருந்தது. அதில் ஒரு பில்லியன் டாலரை திருப்பி கொடுத்து விட்டது. டாடா ஸ்டீல் மற்றும் டாடா டெலி சர்வீசஸின் பங்குகளை மற்ற டாடா நிறுவனங்களுக்கு விற்றுதான் டாடா மோட்டார்ஸ் ஒரு பில்லியன் டாலரை திரட்டி வங்கியில் கட்டியது. இன்னும் 2 பில்லியன் டாலரை ஜூன் ஒன்றாம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இப்போது அதற்காக நிதி திரட்டுவது தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், அந்த வங்கியில் சொல்லி, பிரிட்ஜ் லோனையே ' டர்ம் லோனாக ' மாற்றி கொடுக்கும்படி கேட்டிருக்கிறது. இப்போது உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால், தேவையான மீதி பணம் 2 பில்லியன் டாலர்களை இப்போது திரட்டுவது கஷ்டம் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. எனவே தான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு, பேங்கிலேயே பேசி, பிரிட்ஜ் லோனை டர்ம் லோனாக மாற்ற முயன்று வருகிறது.
நன்றி : தினமலர்


2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//திரட்டுவது கஷ்டம் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது. எனவே தான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு, பேங்கிலேயே பேசி, பிரிட்ஜ் லோனை டர்ம் லோனாக மாற்ற முயன்று வருகிறது.//

ஓஓஓ அப்படியா

பாரதி said...

ஆ.ஞானசேகரன்
வருகைக்கு நன்றி