Saturday, February 7, 2009

பைலட்கள் சம்பளத்தில் ரூ.80 ஆயிரத்தை குறைத்தது கிங்ஃபிஷர்

தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், பைலட்களின் சம்பளத்தில் ரூ.80 ஆயிரத்தை குறைத்திருக்கிறது. எல்லா பைலட்களுக்கும் இது பொருந்தும் என்று அது தெரிவித்திருக்கிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் பைலட் ஒருவர் தெரிவித்தபோது, நாங்கள் முன்பு மாதம் ரூ.4.30 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தோம். இனிமேல் அதில் ரூ.80 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ.3.50 லட்சம்தான் சம்பளம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் டெக்கான் ஏர்லைன்ஸூடன் கிங்ஃபிஷரை இணைத்ததுதான் என்றார். எங்களுக்கு கொடுக்கப்பட்ட 70 மணி நேர பறக்கும் நேரத்தை ( ஃபிளையிங் ஹவர்ஸ் ) அடிப்படையாக கொண்டுதான் எங்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. டெக்கான் ஏர்லைன்ஸூடன் கிங்ஃபிஷரை இணைப்பதால், பழைய டெக்கான் ஏர்லைன்ஸ் பைலட்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை போலவே எங்களுக்கும் இருக்க வேண்டும் என்று சொல்லி சம்பளம் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கிங்ஃபிஷரின் இந்த சம்பள குறைப்பு விவகாரம் அதன் பைலட்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அதில் பணியாற்றும் சுமார் 600 பைலட்களை கொண்ட அமைப்பு, சம்பளம் குறைக்கப்பட்டால், எங்களுக்கும் நிர்வாகத்துக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டதாக கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றது.
நன்றி : தினமலர்


No comments: