டிசம்பர் 13ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.61 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், அதற்கு முந்தின வாரத்தில் 6.84 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் 6.57 சதவீதமாக இருக்கும் என்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பை பொய்யாக்கும் விதமாக அதைவிட சிறிது அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்
2 comments:
அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், காய்கறிகள் விலை குறைந்ததா எனச்சொல்லுங்கள். அப்ப்போ பணவீக்கம் குறைந்தது என ஒத்துகொள்ளலாம்.
இராகவன் நைஜிரியா வருகைக்கு நன்றி
எங்க குறைய?
Post a Comment