Friday, December 26, 2008

2008ல் மியூச்சுவல் பணட் நிறுவனங்கள் இழந்தது ரூ.1,50,000 கோடி

மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களுக்கு லாபமோ நஷ்டமோ மாறி மாறி வரத்தான் செய்யும் என்பது வேறு விஷயம். ஆனால் 2008 ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை ( அல்லது மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியை ) இழந்திருக்கின்றன. மியூச்சுவல் பண்ட் திட்டம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் துவங்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள மாஸாசூசட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் 1925 ம் வருடம் ஆரம்பித்தது தான் முதல் மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருக்கின்றன. மியூச்சுவல் பண்ட்டிற்கு 2007 ம் வருடம் ஒரு நல்ல வருடமாக இருந்திருக்கிறது. அந்த வருடத்தில் மட்டும் ரூ.2,30,000 கோடி அதில் புதுதாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து அந்த வருடத்தில் மொத்தம் ரூ.5,50,000 கோடி முதலீடாக இருந்தது. ஆனால் 2008 ம் வருடம் மியூச்சுவல் பண்ட்க்கு ஒரு மோசமான வருடமாக இருக்கிறது. இந்த வருடம் மட்டும் மியூச்சுவல் பண்ட்டில் ரூ.1,50,000 கோடி முதலீடு குறைந்திருக்கிறது. 2007ல் ரூ.5,50,000 கோடியாக இருந்த அது, இப்போது ரூ.4,00,000 கோடியாக குறைந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களோ, 2009ல் எல்லாம் சரியாகி விடும் என்றும், மீண்டும் மக்கள் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: