
நவம்பர் 15ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.84 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.90 சதவீதமாக இருந்தது. மெட்டல், பழங்கள், சில உற்பத்தி பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், ரப்பர் போன்றவைகளில் விலை இந்த வாரத்தில் குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலைப்பட்டியல் அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த அக்டோபரில் இருந்து ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ரூ.2,75,000 கோடியை புழக்கத்தில் விட்டிருக்கிறது. மேலும் வங்கிகளுக்கான சி.ஆர்.ஆர்.மற்றும் ரிபோ ரேட்டையும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்
2 comments:
ஆனாலும் விலைவாசி இன்னும் குறஞ்ச மாதிரி தெரியலயே சார்...பங்குச் சந்தை தான் குறஞ்சுகிட்டே போகுது
வருகைக்கு நன்றி
Post a Comment