Friday, November 7, 2008

பெட்ரோல் விலை குறையாது

பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி இன்னும் அரசு யோசிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி எவ்வித பரிசீலனையும் செய்யப்படவில்லை. பெட்ரோல் விற்பனையின் மூலம் கிடைக்ககூடிய லாபம் கணிசமாக அதிகரித்த போதிலும் டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தை ஈடுகட்ட வேண்டியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு நிலை இல்லாமல் ஏற்றம் இறக்கத்தில் உள்ளது.
பனிரெண்டு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மூலம் லாபம் ஈட்ட துவங்கியுள்ளன. இருப்பினும் மற்ற மூன்று வகைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்



No comments: